Thursday, October 20, 2016

ஏன் சிவப்பு இறைச்சி கான்சர்வர முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது?

பேலியோ டயட் பின்பற்றுபவர்களுக்கு சிவப்பு இறைச்சி முக்கியமான டயட் ஆக பரிந்துரைக்க படுகிறது .ஆனால் பல்வேறு ஆய்வு முடிவுகள் ,ஆராய்ச்சிகள் மற்றும்,who (world health organization ) போன்றவை சிவப்புஇறைச்சி என்பது கான்சர் நோய் வர முக்கிய காரணி அது தவிர்க்க பட வேண்டும் என அறிவுறுத்த்துகிறது..புகையிலை ,ஆல்காஹால் வரிசையில் சிவப்பு இறைச்சியையும் WHO கடந்த ஆண்டு புற்று நோயின் முக்கிய காரண பொருளாக அறிவித்துள்ளது. ஏன் நம் முன்னோர்களின் முதன்மை உணவாக இருந்த இறைச்சி , மனித மூளை வளர்ச்சிக்கு அதிக புரதங்களை அளித்து பரிணாம வளர்ச்சியில் முதன்மையான உயிரினமாக நம்மை மாற்றிய இறைச்சி ஏன் இன்று நம்மை கொல்லும் ஆயுதமாக நம்முன் இருக்கிறது ?
இதற்கு முக்கிய காரணம் நம் இறைச்சிகளை சமைக்கும் முறை. சமைக்கும் முறையே இறைச்சி நமக்கு நல்லது செய்யபோகிறதா இல்லை நன்மை விளைவிக்க போகிறதா என்பதை தீர்மானிக்கிறது. கிரில்,பார்பிக்யூ, மேலும் அதிக வெப்பநிலையில் வாணலியில் இறைச்சியை சூடேற்றும்போதும் கெட்ரோசைகிலிக் அமின்ஸ் (Heterocyclic Amines) மற்றும் பாலிசைகிலிக் அரோமாட்டிக் ஹைட்ராகார்பன்ஸ் ( Polycyclic Aromatic Hydrocarbons) போன்ற கான்செர் காரணிகளை தோற்றுவிக்கிறது .
HA மற்றும் PAH போன்றவற்றை தவிர்க்க பின் வரும் முறைகளை பின்பற்றலாம்.
1. 150°C / 300°F வெப்பநிலைக்கு அதிகமாக சமைக்காதிருத்தல்.
2. தீயில் அதிகம் கருகிய இறைச்சி பாகத்தை உண்ணாதிருத்தல் .
3. இறைச்சி உண்ணும்போது எலுமிச்சை ஜூஸ் மற்றும் இஞ்சி உடன் எடுத்துக்கொள்ளுதல்.
4. இறைச்சியின் ஒரு பகுதியை அதிக நேரம் வேக விடாமல் ,அனைத்து பகுதிக்கும் சமமாக வெப்பம் கிடைக்கும்படி பார்த்து கொள்ளுதல்.
மற்றொரு முக்கிய காரணம் நாம் இறைச்சியின் தசை பகுதிகளை மட்டும் உண்ணுவது ,அவ்வாறு உண்ணாமல் தலை முதல் வால் வரை அனைத்து பகுதிகளும் சம அளவில் இருக்கும்படி இறைச்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் . தசை பகுதிகளை மட்டும் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டிருந்தால் அதில் அதிகமாக உள்ள அமினோ அமிலம் மேதினின் (methionine) பல்வேறு இன்னலை கொடுக்கும். எனவே nose to tail என்பது போல, அனைத்து பகுதிகளும் எடுத்து கொண்டு அனைத்து சத்துக்களும் சமநிலையில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தது தொடர்ச்சியாக அதிகமான சிவப்பு இறைச்சி எடுக்கும்போது,உடலில் சேரும் அதிக படியான இரும்பு சத்து ஆண்களுக்கு பல உடல் உபாதைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகப்படியான இரும்பு சத்து வெளியேறிவிடும் வாய்ப்பு உள்ளது எனவே தொடர்ச்சியாக சிவப்பு இறைச்சி உண்ணும் ஆண்கள் , வருடம் 2 அல்லது 3 முறை ரத்த தானம் செய்து இதனை சரி செய்ய முடியும்.
முடிந்தவரை பதபடுத்தப்பட்ட இறைச்சியை தவிர்த்துவிட்டு,நல்ல தரமான இறைச்சியை நல்ல முறையில் சமைத்து அளவோடு உண்டு வளமுடன் வாழ்வோம்.

முட்டை ஆபத்தா ?

வாரம் 5 முட்டைகளுக்கு மேல் உண்டால் #prostate cancer எனப்படும் விதைப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் மிக மிக அதிகம்.இந்தியாவில் அனைத்து நகர்ப்புறங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும் prostate கான்சர்க்கு தனியாக பிரிவுகள் அமைக்கும் அளவு இந்த புற்று நோய் பரவி வருகிறது..முட்டையில் உள்ள கோலின் ( choline) என்ற பொருள் இந்த வகை புற்று நோய்க்கான மிக முக்கிய காரணியாக இருக்கலாம் என தீவிர ஆராய்ச்சிகள் நடை பெற்று கொண்டு இருக்கின்றன. முட்டை அதிகமாக உண்டால் தற்காலிகமாக சர்க்கரை அளவு குறையும்,உடல் எடை குறைக்கலாம் ,ஆனால் பின் விளைவாக சில ஆண்டுகளில் புற்று நோயளிகளாக வாய்ப்புகள் மிக அதிகம். எனவே பேலியோ டயட் பின்பற்றும் நண்பர்கள், முட்டையின் அளவை பெருமளவு குறைத்து சிவப்பு இறைச்சி,நெய்,வெண்ணெய்,பாதாம் போன்றவற்றில் இருந்து அதிக கொழுப்புகளை எடுத்து கொள்ள வேண்டும்.. முட்டைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

பேலியோ 2.0

தமிழகத்தில் ஈமு கோழி ,பைன் பியூச்சர் போன்ற சதுரங்க வேட்டை வரிசையில் புதியதாய் சேர்ந்திருக்கிறது கற்கால மனிதனின் உணவுமுறை என்றழைக்க படும் பேலியோ டயட்.. 1975 களில் வால்டர் வொங்டளின் (Walter Voegtlin), ஸ்டான்லி பாய்ட் ஈட்டன்(Stanley Boyd Eaton) மற்றும் மெல்வின் கொன்னேர் ( Melvin Konner),போன்றவர்களால் அறியப்பட்டு பின் லோரன் கார்டைன் என்ற அமெரிக்க விஞ்ஞானியால் பிரபலமான பேலியோ டயட் எனப்படும் குகை மனிதனின் உணவு முறை ஒரு ஹாலிவுட் திரைபடம் தமிழ் கலாச்சாரத்துக்கு ஏட்ப மாற்றங்கள் பல செய்து ரீமேக் செய்யப்படுவதை போல், தேவையான அளவு தமிழக மக்கள் ஏற்று கொள்ள கூடிய ,நம்பவைக்க கூடிய அளவு மாற்றம் செய்யப்பட்டு அழகான களமிறக்கப்பட்டுள்ளது.
சில வருடங்கள் முன் ஈமு கோழி அறிமுகமான போது இருந்த சூழலின் சாயலை இப்போது நன்றாக முடிகிறது . என்னென்ன விளம்பரங்கள் ஒளி பரப்ப பட்டன ஈமு கோழியை மக்களுக்கு அறிமுக படுத்துகையில் .
ஈமு முட்டை ஒரு லட்ச ரூபாய்.
ஈமுகோழி இறைச்சி கொழுப்பு அற்றது,இதயத்துக்கு மிகவும் நல்லது.
ஈமு ஆயில் பல கோடி ரூபாய்க்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
பத்து ஈமு கோழி வளர்த்தால் மாதம் 15 ஆயிரம் கூலி ,கோழி தீவனமும் அவர்களே கொடுப்பார்கள்.
பிள்ளையை பெத்த கண்ணீரு ,ஈமுவ வளர்த்த பென்ஸ் காரு
இதில் நமது சினிமா நட்சதிரங்கள் ஈமு கோழிக்கு செய்த விளம்பரங்களும் ,ஈரோடு ,திருப்பூர் போன்ற பகுதிகளில் ஈமுவுக்கென்றே தனியாக ரெஸ்ட்ராண்ட் துவங்க பட்ட கதைகளும் ஏராளம். உண்மை வெளிச்சத்திற்கு வந்த பின், 20000 ரூபாய் கொடுத்து வாங்கிய ஈமு கோழி ஒன்று 500 ரூபாய்க்கு கூட வாங்க ஆளின்றி ,உரிமையாளர்களால் அனாதையாக விடப்பட்டு,உண்ண உணவின்றி ,பேருந்துகளிலும் , லாரிகளில் அடிபட்டு இறந்த சோக கதைகள் கோவை புறமக்கள் நன்கு அறிவார்கள்...
இதோ இன்றைய கவர்ச்சி விளம்பரங்கள் :
சர்க்கரை நோய் நிரந்தர தீர்வு
பிரஷர் நிரந்தர தீர்வு
இஷ்டம்போல் அசைவ உணவுகள் ,பத்தியம் இல்லை
உடல் எடை குறைப்பு அபாரம்
எந்த நோய் பெயரை சொன்னாலும், அது பேலியோ டயட்டால் சரி செய்யப்படும்
திருமணம் ஆகவில்லையா ? பேலியோ
குழந்தை பிறக்கவில்லையா ? பேலியோ
சொத்து பிரச்சனயா? பேலியோ
என எங்கும் பேலியோ,எதிலும் பேலியோ.
குறைந்த மாவு சத்து ,அதிக கொழுப்பு(low corb ,high fat ) என்பது பல ஆண்டுகளாக உடல் எடை குறைக்கும் மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று. ஆனால் அது நோயாளிகளின் உடல் நிலையை பல விதத்தில் ஆராய்ந்த பின்னரே,முறையாக கற்றறிந்த மருத்துவர் நோயாளிகளின் உடல் நிலைக்கு தகுந்தவாறு அளிக்கப்பட வேண்டும். அதுபோல சர்க்கரை,பிரஷர் போன்றவைகளுக்கு மருந்துகள் மற்றும் டயட் வழங்கும்போதும் நோயாளிகளின் முழு உடல் நிலையை பரிசோதித்த பின்னரே அவர்கள் உடல் நிலைக்கேட்ப வழங்கப்படும்..பொதுவாக ஆங்கில மருத்துவர்கள் நோயாளிகளின் நோய்தீர்ப்பதில் சோதனை முயற்சியில் ஈடுபட மாட்டார்கள் ,நன்கு அறியப்பட்ட ,நிரூபணம் செய்யப்பட்ட மருத்துவ முறைகளையே கையாள்வார்கள். உதாரணமாக சர்க்கரை நோயாளிகளை தினமும் நான்கு முட்டைகள் எடுத்துக்கொள்ளுங்கள் என எந்த மருத்துவரும் பரிந்துரைக்க மாட்டார், மாவு சத்துள்ள உணவுக்கு பதிலாக கொழுப்பு சத்துள்ள முட்டை உண்டால், ரத்த சர்க்கரை ஏறாது என அவருக்கு தெரியாதா? வாரம் 5 முட்டைகளுக்கு மேல் உண்டால் ப்ரோஸ்டேட் கான்செர் (prostate cancer ) எனப்படும் விதைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். முட்டையில் உள்ள கோலின் ( choline) என்ற பொருள் இந்த வகை புற்று நோய்க்கான மிக முக்கிய காரணியாக இருக்கலாம் என தீவிர ஆராய்ச்சிகள் நடை பெற்று கொண்டு இருக்கின்றன. இது போன்று முடிக்கப்படாத பல ஆராச்சிகள் உள்ளன.முட்டை அதிகமாக உண்டால் தற்காலிகமாக சர்க்கரை அளவு குறையும்,உடல் எடை குறைக்கலாம் , ஆனால் பின் விளைவாக சில ஆண்டுகளில் புற்று நோய் போன்ற மிகபெரிய நோய்களில் சிக்கி, வாகனங்களில் அடிபட்டு செத்த ஈமு கோழிகளின் நிலைமை தான் நமக்கும். அதே போல்,பிராய்லர் சிக்கனில் ஸ்டெராய்ட்(steroid) ஊக்க மருந்து பயன்படுத்த படுவதும் , அதனால் ஸ்டெராய்ட் ஊசி செலுத்தப்படும் கழுத்து மற்றும் இறக்கை (wings ) பகுதியை பெண்கள் உண்டால் அவர்களுக்கு கர்ப்பபையில் கட்டிகள் தோன்ற வாய்ப்புகள் மிக அதிகம் என ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடபட்டு பின்னர் மிகப்பெரிய சிக்கன் வர்த்தகத்தை கருத்தில் கொண்டு இந்த செய்திகள் அனைத்தும் முடி மறைக்கபட்டது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை..
பேலியோ ஒரு நல்ல உணவு முறை என்பதில் மாற்றமில்லை. ஆனால் நமக்கு கிடைக்கும் உணவுகள் மற்றும் இயறகை சூழ்நிலை கற்கால மனிதனுக்கு கிடைத்தது போலவா இருக்கிறது? இன்று கிடைக்கும் அசைவ உணவுகளின் தரம் பற்றி பின்னொரு விரிவான கட்டுரை எழுதுகிறேன். இன்று 100 சதவீதம் நாம் குகை மனிதனின் உணவு முறையை பின்பற்ற முடியாது என்பது உறுதி.ஆனால் நாம் உடல் நிலைக்கு தகுந்தாற்போல் நமக்கு கிடைக்கும் தரமான உணவு பொருட்களை கொண்டு ஒரு சிறந்த டயட் முறையை நாம் அமைத்து கொள்ள முடியும்...
இன்று ஒரு வலை தல குழுவினர் ஏதோ பேலியோவை தாங்கள் பெற்றெடுத்த பிள்ளை போல் உரிமை கொண்டாடி சீராட்டி சிங்காரித்து கொண்டு இவர்களே பல வகையான மருத்துவ சோதனைகளை பரிந்துரை செய்கிறார்கள் , பின் அவர்களே அதை பரிசோதித்து நோயாளிகளுக்கு அறிவுரை வழங்குகிறார்கள் , டயட் வழங்குகிறார்கள். இவர்கள் யாரென்று பார்த்தால் ,மருத்துவ பின்புலம் சிறிதுமற்ற சில மருத்துவ வலைபூ பக்கங்கள் மேய்ந்த மென்பொருள் நிறுவன ஊழியர்களும் , சில வேலையற்ற முகநூல் புலிகளும்,பெயருக்கு சில இளம் மருத்துவர்களும் . நோயாளிகளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ , ஏதேனும் சிக்கலில் மாட்டி கொள்வோமோ என அதில் தப்பும் பொருட்டு, பொறுப்பு துறப்பு என நாசுக்காக முதலிலே எதற்கும் பொறுப்பல்ல என சொல்லி விடுகிறார்கள்..ஏதோ குழந்தைகள் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுவதுபோல் இவர்கள் டாக்டர் ,நோயாளி டயட் விளையாட்டு விளையாடுகிறார்கள்..பேலியோ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனபது வேறு, பேலியோவை ஒரு மதம் போல் பரப்பி ஆதாயம் தேடுவது என்பது வேறு..இவர்கள் வழங்கும் பொறுப்பு துறந்த சேவையில், மொத்த குடும்பமும் தன்னை மட்டுமே நம்பி உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டால்,,அவரின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும் ..மற்ற குழுவினை போல் இங்கு பேலியோவின் நன்மைகள் ,புகழ்ச்சி மட்டுமே பேச வேண்டிய அவசியம் இல்லை , பேலியோவை பற்றி அனைத்து குறை விமர்சனமும் ஏற்றுக்கொள்ளபட்டு பதிவிட படும்.
மக்கள் எவர் என்ன சொன்னாலும் அதை குருட்டு தானமாக பின்பற்றாமல்,நன்கு பகுத்து ஆராந்து , தன உடல் நிலையை கருத்தில் கொண்டு நல்ல அனுபவம் உள்ள மருத்துவ துறை சார்ந்த ஒரு நண்பரிடம் கலந்து ஆலோசித்தே அதை பின்பற்ற வேண்டும் .. வெளி நாடுகளில் ஒருவர் உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் , ஏன் உங்கள் உடலுக்கு என்ன ?என்று கேட்பது கூட மிக மிக அநாகரிகமான கருதப்படும் , அது மிகவும் பர்சனல் கேள்வியாக பார்க்கப்படும். ஆனால் இஙகு அப்பாவி மக்கள் தங்கள் உடல் நிலை பற்றிய மருத்துவ அறிக்கைகளை ,ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு பொதுவான இடத்தில சிறு தயக்கமும் இன்றி பதிவிடுகின்றனர் இது எவ்வளவு அபத்தமானது மற்றும் ஆபத்தானது.உங்கள் உடல் நிலை பற்றிய ரகசியங்களை பொதுவிடத்தில் பதிவிட்டால் அதை வைத்து உங்கள் உணர்வுகளுடன் ஒருவர் விளையாட முடியும்,உங்களை ஒருவர் எளிதில் பலவீன படுத்திவிட முடியும். முடிந்தவரை உங்கள் பெயர் , விலாசம் போன்றவற்றை எங்கும் இணையத்தில் பதிவிடாதீர்கள்.

இந்த வலைப்பூவில் பேலியோ டயட் என பரிந்துரைக்க பட்டுக்கொண்டிருக்கும் டயட் முறையில் உள்ள தீமைகளை வடிகட்டி, நமக்கு தகுந்தாற்போல் நம் தினசரி உணவிலேயே சில மாறுதல்களை செய்து எப்படி ஆரோக்கியமாக வாழலாம் என விளக்கமாக பாப்போம். www.paleov2.blogspot.com