Tuesday, November 1, 2016

வலைபூவில் தேனெடுக்கும் வண்டுகளுக்கு

இந்த தளத்தில் பேலியோ டயட்டின் தீமைகள் & நம் பாரம்பரிய உணவு முறைகள் பற்றி மட்டுமே விவாதிக்கப்படும்.பேலியோ மீது பற்று கொண்டுள்ள  நண்பர்கள் யாரையும் இங்கு கையை பிடித்து நாங்கள் இழுக்க வில்லை, தேவை இல்லாமல் நீங்கள் இங்கு வந்து உங்கள் நேரத்தை விரயமாக்கவேண்டாம். நீங்கள்  மட்டும் ஆங்கில மருத்துவத்தையும், மருத்துவ உலகத்தையும் கண்டபடி விமர்சனம் செய்யலாம். ஆனால் யாரும் பேலியோவுக்கு  எதிராக  வாயை திறக்க கூடாது, நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்.  பேலியோவின் தீமைகளை பற்றி தெரிந்து விரும்பினால் மட்டும், இந்த வலை பூவிற்கு வரலாம். பேலியோவால் ஏற்படும் பாதிப்புகளை எவரேனும் ஒருவருக்கு தடுத்து நிறுத்தினால்கூட அது எங்கள் வெற்றி தான். அது போதும் எங்களுக்கு.

நாங்கள் ராகி களி  உண்ண  சொல்லும் முட்டாள்களாகவே இருந்து விட்டு போகிறோம், உங்களுக்கு கவலை வேண்டாம். மாதம் 2000 ரூபாய்க்கு மருந்து  வாங்கி சாப்பிட வேண்டாம், ஆனால் அந்த பணத்திற்கு 3 கிலோ பாதாம் வாங்கி உண்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்.

கடைசியாக நாங்கள்  சொல்வது ஒன்றே ஒன்று தான். பேலியோ ஒரு எடை குறைப்பு மருத்துவம், அதுவும் மிக குறைந்த காலம்  மட்டுமே பின் பற்றப்படவேண்டிய ஒன்று, இதை தொடர்ச்சியாக நீண்ட நாள் பின்பற்றுவது மிக மிக ஆபத்தானது. மாதம் 3கிலோ பாதாம் , 10 கிலோ இறைச்சி (தினசரி 300கிராம்), 150 முட்டை (தினசரி 5) . வருடம் 35 கிலோ பாதாம், 120 கிலோ  இறைச்சி,1700 முட்டைகள். இதை உடல் தாங்குமா ?இவ்வளவு ப்ரோடீன் உடலுக்கு நல்லதா என்று யோசியுங்கள் ? தற்காலிக தீர்வுகளுக்கு , உயிரை பணயம் வைக்காதீர்கள்.

எங்கள் பயணம் வழக்கம் போல் தொடரும்.

6 comments:

  1. பேலியோ மீது பற்றுள்ளவர்கள் அவர்களுடைய முழு அடையாளத்துடன்தான்ஆங்கில மருத்துவத்தையும் வேறு சில பல விஷயங்களையும் எதிர்க்கிறார்கள் இப்படி உன்னை போல் முகத்தை முடிக்கொண்டு எதிர்ப்பதில்லை

    அதனை புரிந்து கொண்டு பதில் பேசு

    ReplyDelete
  2. முகத்தை மூடி மறைத்துக் கொண்டு இப்படி ஒரு கேவலமான ஈனச் செயலில் ஈடுபடும் உனக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சுரனை எதுவுமே இல்லையா ? நீ செய்வது சரியாக இருக்கும் பட்சத்தில் ஏன் முகத்தை மூடி மறைத்துக் கொள்கிறாய் ? நீ ஒரு கோழை.....

    ReplyDelete
  3. In our regular food calculate the amount of Rice and other items for one year including junk food which is good? or you can suggest a better diet with your identity in fb or in this blog itself

    ReplyDelete
  4. Paleo voda theemai thaaniyathoda nanmai nu solreenga.... aana velum paleo thitturathula mattume kanavam seluthuvadhu poal erukke .... apdi enna than unga thaaniyam perusunu comparitive study kaaminga.... statistics podunga... proof podunga... adhellam vittutu vandugal sendugal adaimozhila thalaippu mattum balama podureenga... ulla paarththa sarakke elliye pa thambi ...

    ReplyDelete
  5. " பேலியோவின் தீமைகளை பற்றி தெரிந்து விரும்பினால் மட்டும், இந்த வலை பூவிற்கு வரலாம் " - Naangal edhayum sportive aga araaindhu mudivu edupavargalagave erukinroam ... ungalai patri oruvar ungal kaathupada kuraikoorikonde erukkum podhu apdi enna than peasuranganu parpoam ellaiya apdi than unga valai poovirku vanthoam. Edhai mear kondu paarpathum paarkamal erupathum engal viruppam. ungal anava peachukalai podhuvil peasavendam... Eludhuvadhu ungal urimai endral adhai padipadhum adhukum pathil kooruvathum engal urimai....

    நீங்கள் மட்டும் ஆங்கில மருத்துவத்தையும், மருத்துவ உலகத்தையும் கண்டபடி விமர்சனம் செய்யலாம். ஆனால் யாரும் பேலியோவுக்கு எதிராக வாயை திறக்க கூடாது, நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம் - Pathiluku pathil senji sandai valakkurathuku oru valaipova thala... appa neenga makkalukku nallathu seiya varala... Jolly ah prachanaiya kelappi publicity theadureenga... sabaash....

    ReplyDelete
  6. you write very well-only time will tell what is going to happen to these paleo dieters. Continue with your good work.

    ReplyDelete