Monday, October 31, 2016

கொதிக்கும் நண்பர்களுக்கு!!


நண்பர்களே வணக்கம்,
                எங்கள் முக நூல் பக்கங்களை முடக்கிய நண்பர்களுக்கு நன்றி. முதலில் இந்த வலை பூ ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கிறோம், அனைத்து மக்கள் போல் எங்களுக்கும் பேலியோவின் மீதி மிக அதிக காதல் முன்னர் இருந்தது, அதை  நாங்கள்  பின்பற்றியதுடன் மட்டுமில்லாமல் எங்கள்  நண்பர்கள் அனைவருக்குமே பரிந்துரைத்து  வந்தோம். நாளடைவில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தபோது , அனைத்திலும் பொதுவாக பட்டது , அசைவ உணவுகள் தொடர்ச்சியாக எடுப்பது மிகவும் ஆபத்து என்று. ஆனால் பேலியோ குழுவில் இது பற்றி விவாதிக்கும் பொருட்டு சில கேள்விகளை எழுப்பினோம்? ஆனால் எங்கள் post கள் குழுவில் பிரசுரிக்க மறுக்கப்பட்டன. பேலியோவின் தீமைகள் பற்றிய  எந்த ஒரு  செய்தியும் பிரசுரிக்க படுவதே இல்லை. மேலும் இது பற்றி வினா எழுப்பியவர்கள் அதிரடியாக குழுவில் இருந்து நீக்க பட்டார்கள்.

குழுவில் நன்மை தீமை இரண்டுமே விவாதிக்க பட வேண்டும், அதற்கு தகுந்தாற்போல் நம் உணவு முறைகளை மாற்றி கொள்ள வேண்டும். எதையும் ஒரு தலை பட்சமாக பார்ப்பது தவறு.  நன்மைகளை பேசும் அதே சமயம் தீமைகளும் விவாதிக்க பட வேண்டும். எங்கள் வலை பூவில் கேள்வி கேட்க தொடங்கிய  பிறகு தான், சிக்கனில் கிட்னி,கல்லிரல் போன்றவை உண்ண  கூடாது, கிட்னி பிரச்னை உள்ளவர்கள் 50-60 கிராம் புரதம் மட்டுமே எடுக்க வேண்டும் என அந்த குழுவில் டயட் முறைகளை மாற்றி உள்ளார்கள். 50-60 கிராம் ப்ரோடீன் உணவு பேலியோ டயட்டில் சாத்தியமா?

மேலும் பேலியோ மனிதர்கள்  தானியங்கள் உண்ணவில்லை இல்லை என்று எப்படி உறுதியாக  சொல்கிறீர்கள்? அமிலேஸ்( Amylase) gene  எணிக்கை எப்படி 10 ஆனது, சிம்பாஞ்சிகளுக்கு 2 மட்டுமே இருந்தது? 30000 ஆண்டுகள் முன் கிடைத்த தானியம் அரைக்கும் கற்கள் பற்றிய கருத்து, அதிக முட்டை உண்டால் வரும் ப்ரோஸ்டேட் (prostate ) கான்செர் பற்றிய கருத்து,அதிக விலங்கு புரதம்,அதிக யூரிக் ஆசிட்,பின் கிட்னி செயலிழப்பு?  போன்றவை உங்கள் குழுவில் பிரசுரிக்க இல்லை.மேலும் நாங்கள்  இந்த கேள்வி கேட்டதால் நாங்கள் நாய்களை போல குழுவில் இருந்து விரட்டி அடிக்க பட்டோம். பேலியோ வை புகழ்பவர்கள் மட்டுமே குழுவில் இருங்க முடிந்தது.


பேலியோ எடை குறைக்க அதிக பட்சம் 3 மாதங்கள் மட்டுமே பின்பற்றக்கூடிய கூடிய நல்ல உணவு முறை. ஆனால் அது நீரிழிவு நோய் ,பிரஷர்  போன்ற நோய்களுக்கு நிரந்தர தீர்வாகாது என்பது எங்கள் வாதம்.இதன் பின் விளைவுகள் ஏராளம்.நாங்கள்  ஏதோ கார்ப்பரேட் கைக்கூலிகள் அல்ல, மிக மிக சாதாரணமா மனிதர்கள் (common men ), நாங்களும் உங்கள் நண்பர்களே , எங்களுக்கு அந்த குழுவில் விவாதிக்க இடம் தரறதே இந்த வலை பூ , தீமைகள் பற்றி விவாதிக்க ஒரு தளம். நியாண்டெர் செல்வன் மீது மிக பெரிய மரியாதை கொண்டவர்கள் நாங்கள் , தமிழக மக்களுக்கு உடலியல் மற்றும் நோயியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில்  அவர் பங்கு நிச்சயமாக போற்ற  பட வேண்டியது. ஆனால் அதற்காக  அவர் சொல்லும் அனைத்து கருத்துக்களுக்கும் "ஆமாம்" போட முடியாது. சில எதிர் விவாதங்கள் கட்டாயம் தேவை படுகின்றன.கட்டாயம் அதை அவரும் விரும்புவர் என எண்ணுகிறோம். நாங்கள்  அவருக்கு எதிரி அல்ல, அவர் சொல்லும் சில கருத்துக்களுக்கு மட்டும் தான்.. நீங்களே சொல்லுங்கள், எதிர்மறை வினாக்களோடு எதாவது ஒரு post-ஐ உங்கள் குழுவில் பார்த்து இருக்கறீர்களா?  LCHF மிகவும் நல்ல உணவு முறை, இதை நாங்கள் தவறு சொல்ல வில்லை , ஆனால்  அதற்காக பரிந்துரைக்க படும் சில உணவு பொருள்களுக்கு தான் எதிர்ப்பு.

பண்ணை கோழியை அவர் மக்களை உண்ண மிகவும் ஊக்கம் அளிக்கிறார். அது தவறு என யாரும் வாதிட கூடாது என நீங்கள் எண்ணுகிறீர்களா?
மட்டன்  கிலோ 500 ரூபாய், ஒரு வாரம் பழையது ஆனாலும் ஹோட்டல்களில் அதை வெளியே தூக்கி வீச மாட்டார்கள் ,சூடு செய்து அப்படியே தான் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பார்கள். தினமும் பேலியோ டயட் எனும் பெயரில் சிக்கன்,மட்டன் என உண்ணும் நண்பர்களின் நிலை என்ன? இது பற்றி யாரும் எதுவும் சொல்ல கூடாதா?
 50 வருடங்கள்  முன் நம் தாத்தா பாட்டி ஆரோக்கியமாக இருந்தார்களே  ஏன் அவர்களை விட்டு 1000 வருடங்கள் முன் வாழ்ந்த அமெரிக்க ஆதிவாசிகளை உதாரணமாக சொல்கிறீர்கள் என கேட்க கூடாதா ?

நன்மை தீமை இரண்டும் சம அளவில் விவாதிக்க பட வேண்டும் , அப்போது தான் உண்மையான கருத்துக்கள் கிடைக்கும்.

இது யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுத படும் வலைப்பூ அல்ல, இதனால் எங்களுக்கு மிகவும் நேர விரயம் தான் , இதில் என்ன லாப நோக்கம் இருக்க முடியும்?

இது நன்மை தீமைகளை விவரிக்கும் ஒரு தளமே. இங்குள்ள கேள்விகளுக்கு  குகுளில் தேடி பார்த்து பதிலளியுங்கள், நாங்கள் தவறென்றால் ஒப்பு கொள்கிறோம். தனிப்பட்ட விமர்சனங்களால் ஒரு பலனுமில்லை, நல்ல கருத்துடன் வாருங்கள் ஆரோக்கியமான விவாதம் செய்வோம்.

11 comments:

  1. வணக்கம் ,

    நான் முதல் வகை சர்க்கரைநோய் உள்ளது .இதன் பொருட்டு நிறைய படிக்கும் பொழுது கிடைத்தது ஒரு முகநூல் பக்கம் . அதில் அவர்களில் பதில்கள் அனைத்தும் உண்மையாக தான் இருந்தது .

    இப்பொழுது அவர்களின் உணவு முறை மூலம் நான் எனது இன்சுலின் அளவை குறைத்து உள்ளேன் .இது தவறா என்று எனது மருத்துவரிடம் கேட்டபொழுது ,அவர் நல்லமுண்ட்ற்றம் உள்ளது தொடருங்கள் என்று கூறினார். இரண்டு குழந்தைகள் உள்ளது. இதனை தொடர்வதா ? அல்லது பழைய உணவு முறைக்கு செல்வதா? என்று குழப்பம் .உதவ முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. சுடுகாட்டுக்கு வந்து வெட்டியான் கிட்ட உயிர் பிச்சை கேட்கிற மாதிரி இருக்கு வாசுகி மேடம் நீங்க கேட்கிறது. உங்கள் மருத்துவரே தொடர சொல்லும் போது.. முகமறியாவரிடம் உதவி கேட்கிறிர்கள்... உங்களை பேலியோக்கு யாரும் இழுத்து வரவில்லை.. பேலியோ மீது நம்பிக்கை இல்லையென்றால் உங்கள் மருத்துவரை நம்புங்கள்..

      Delete
    2. கழுவுகிற நீரில் நழுவுகிற மீன்

      Delete
  2. //மட்டன் கிலோ 500 ரூபாய், ஒரு வாரம் பழையது ஆனாலும் ஹோட்டல்களில் அதை வெளியே தூக்கி வீச மாட்டார்கள் ,சூடு செய்து அப்படியே தான் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பார்கள். தினமும் பேலியோ டயட் எனும் பெயரில் சிக்கன்,மட்டன் என உண்ணும் நண்பர்களின் நிலை என்ன? இது பற்றி யாரும் எதுவும் சொல்ல கூடாதா?//

    ஓட்டலில் இல்ல, வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவதுதான் எந்த டயட்டுக்குமே சரியாக வரும்.

    உண்மையியேயெ பேலியோ குழுமம் என்ன சொல்கிறது என்று தெளிவாக வாசித்திருந்தால் இந்தக் கேள்வி எழாது? பேலியோ என்றால் மட்டன் சிக்கனா? நான் தினமும் 200 கிராம் கீரை, 150 கிராம் காய்கறி சேர்க்கிறேன். என்வாழ்னாளில் நானெல்லாம் கீரையை விசமென ஒதுக்கியவள். சிக்கன் - 500 கிராம் ஒரு வாரத்திற்கு, மீன் 500 கிராம், மட்டன் 200-300 கிராம், முட்டை 15 (வாரத்திற்கு). ஒருனாள் 24 மணி விரதம், 3 நாள் 18 மணி விரதம். 17 கிலோ எடை இழப்பு. இதற்கு மேல் என்ன வேண்டும்? என்னுடன் தினமும் 10 கிலோ மீட்டர் நடக்க இன்று நண்பர்கள் எவருமில்லை. நீங்கள் தயாரா?
    //நாங்களும் உங்கள் நண்பர்களே//
    அப்படியென்றால் எங்கே உங்கள் முகம்? முகமற்ற நண்பர்களை வைத்துக் கொண்டு இவ்வுலகில் என்ன செய்யப்போகிறோம்?

    ReplyDelete
  3. இந்த blog இல் எழுதும் இந்த முகமறியா நபர் பேலியோ உணவு முறையைப் பற்றி முழுதாக தெரிந்தவர் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.....

    மருத்துவராகிய நான் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான LCHF, keto போன்ற உணவு முறைகளை ஆராய்ந்தவன். செல்வன் பரிந்துரைக்கும் உணவு முறையில் குறைந்த பட்சம் 50 கிராம் மாவுச் சத்து(carbohydrate) எடுக்கச் சொல்லுகிறார்கள்.... தினமும் காய்கறிகள் , கீரை எடுக்கச் சொல்கிறார்கள்.....தேவையெனில் பழங்களும் உண்ணச் சொல்கிறார்கள். இது modified paleo உணவு முறை ஆகும். இந்த blog எழுதும் நபர் அடிப்படை body metabolism பற்றி எதுவும் தெரியாதவர்....அதற்க்காக நேரம் செலவழித்து எதையும் படிக்காதவர்...இந்த குப்பை blog ஐ படித்து யாரும் நம்பி ஏமாற வேண்டாம். இந்த நபர் எந்த சமூக அக்கறையும், பொறுப்பும் இல்லாதவர்.....இதைப் புரிந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  4. //இது யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுத படும் வலைப்பூ அல்ல, இதனால் எங்களுக்கு மிகவும் நேர விரயம் தான் , இதில் என்ன லாப நோக்கம் இருக்க முடியும்?//

    So what is your intention to run this blog. Everything i appreciated your effort .That effort to point only one Group and a person .I would like to see your face in public .You know buddy .Showing your face and raise your hand and voice for anything .That was done by every Indian brave people .FYI i am also a Doctor and running a clinic .Past few years i started prescribe paleo Diet.Results are awesome .Even i came out of my major issues .I am 68 now .
    Thanks
    Madhu Mithran

    ReplyDelete
  5. பேலியோவை பலர் தவறாகவே புரிந்து வைத்துள்ளார்கள். நீங்கள் கூறுவது போன்று தினம் ஒரு கிலோ இறைச்சி, பத்து முட்டை , உண்ணும் உணவு முறை இல்லை. தினம் 700 கிராம் காய்கறிகள்,கீரை, மூன்று முட்டை, 60 - 70 கிராம் பன்னீர், அல்லது இரண்டு துண்டு மாமிசம், நிறைய தண்ணீர், எழுமிச்சை சாறு, சிறிது நடை பயிட்சி அவ்வளவே. இவை எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தல் புரதம் 60 கிராமுக்கு கீழ் தான் வரும். மேலும் 40 கிராம் கார்பும் கிடைத்து விடும். பீபி, சுகர், உடல் பருமன், சோர்வு, எல்லாம் இல்லவே இல்லை. தயவு செய்து பேலியோ பற்றி முழுவதும் படித்து அறிந்து கொள்ளவும்.

    ReplyDelete
  6. To all the Paleo Lovers, Why are we ignoring or not answering the genuine questions

    Why should members with such post to be discontinued?

    Why take criticism personally and run poll to show strength? what are we try to prove here

    Why are we ignoring or not wanting to accept the fact that age and mortality two generation back is far better than ours (avg age 75+)

    if Farm chicken is ok why not fertilized crop (to me both are poison)

    is the problem in the food we eat or they way they are "produced"? is it not time to correct the way it is produced

    Has anybody seen the health holistically (many more parameters including the EEG to see the brain behavioral pattern - Is paleo a reason for avertion to cricisim

    I'm sure there will some paleo lovers who will either share some fancy shortterm results or get emotionally excited. I request these members to think through please answer these concerns, nothing wrong to repeat again

    Having said, I do respect the moral and intentions of the group, what is required is equal attitude for acceptance along with convinction

    ReplyDelete
  7. Hello,

    The PALEO Group tested for the past two years, I have just started PALEO for 2 months, i feel good improvement in my body standards, there is no better diet than PALEO, Try to understand.

    If you don't follow proper paleo diet it may give some issues, for example, if you want to drink and continue paleo, or if you want to take one time full carbs + paleo, these all not coming under paleo.

    They all come with Dr. Report and report shows all the advantages.

    ReplyDelete
  8. உங்களுடைய கோபம் எனக்கு நன்கு புரிகிறது இருந்தாலும் உங்கள் பதிவில் பல மேலோட்டமான கருத்துக்கள் உள்ளன நான் வேறுசில பதிவுகளை படித்தேன்
    அன்புடன்
    பாலு

    ReplyDelete