Friday, October 28, 2016

எது நல்ல செக்கு எண்ணெய் ?


"தூய மர செக்கு எண்ணெய் இங்கு கிடைக்கும்", "வாகை மர செக்கு எண்ணெய் இங்கு கிடைக்கும்" என தினசரி நாளிதழ்கள்,முகநூல்,ரேடியோ FM  என எங்கு  பார்த்தாலும் இதே விளம்பரங்கள். உண்மையில் இந்த விளம்பரங்கள் செய்யும் நபர்கள் விற்பனை செய்யும் பொருள்கள் உண்மையில் தரமானதா என ஆராய்ந்து பார்த்தால், இவர்கள் விளம்பரபடுத்தும் தரத்திற்கும் ,உண்மை நிலைக்கும் நிறைய வேறுபாடு. முதலாவதாக இவைகள் மர  செக்கு எண்ணெய்யே   இல்லை. மர செக்கில்  ஒரு நாள் ஒன்றுக்கு 50 லிட்டர் எண்ணெய் மட்டுமே எடுக்க முடியும்.அதுவும் ஒரு செக்கை வைத்து கொண்டு கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் ,நல்லெண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்பவர்கள் ,தினசரி ஒரு எண்ணெய்  20 லிட்டர்க்கு மேல் எடுக்க முடியாது. நீங்கள் மர செக்கு வைத்திருப்பவரிடம் ,நேரிலேயே சென்று வாங்கினாலும் , ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி வைத்திருக்கும் எண்ணையிலிருந்தே நமக்கு அதை ஊற்றி தருவார்,அது எண்ணெய் மில்லிலிருந்து வாங்கி அவர்கள் வைத்திருக்கும் எண்ணெய் , அதாவது நம் கடையில் எண்ணையை போன்றதே.10 லிட்டர் எண்ணெய்க்கு  ஒரு லிட்டர் செக்கு எண்ணெய் கலந்து விற்பார்கள். இது தான் உண்மை நிலை.

மரச்செக்கு வைத்திருக்கும் நண்பரிடம் இது பற்றி கேட்டபோது  அவர் சொன்னது மரசெக்கு எண்ணெய் ஆட்டும்போது ஒருவர் செக்கின் பக்கத்திலேயே இருந்து எண்ணெய் புண்ணாக்குகளை  தள்ளி  விட்டு கொண்டே இருக்க வேண்டும்.ஒரு நாள் கூலி அவருக்கு 300 முதன் 400. ஒரு நாள் சராசரியா 50 லிட்டர் எண்ணையில் அதிகபட்சம் லிட்டருக்கு  30 ரூபாய் வைத்தால் கூட வரும் 1500 ரூபாயில் , ஆள் கூலி  400 மற்றும் ,மின்சார செலவு , செக்கின் மரம் மாற்றுதல் போன்றவற்றை பார்க்கும்போது கடைசியில் 700 முதல் 800 ரூபாய் மட்டுமே கையில் நிற்கும். இதில் எப்படி விளம்பரம் செய்ய முடியும், இதில் எப்படி குடும்பம் நடத்த முடியும். எண்ணெய் மில்லிலிருந்து எண்ணெய்  வாங்கி அதனை செக்கு எண்ணையுடன் கலந்து விற்றால்  மட்டுமே எங்களுக்கு  கட்டுப்படி ஆகும்.இல்லா  விட்டால்  350 ரூபாய்க்கு கடலை எண்ணை விற்க வேண்டும்   அப்போது தான் கலப்படமின்றி எண்ணெய்  விற்றால் எங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார்.

சரி உண்மையான செக்கு எண்ணெய் பெற  என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு தூய கடலை  எண்ணெய்  வேண்டுமா, நீங்கள் ஒரு 10 or 20 நண்பர்கள்  ஒன்றாக சேர்ந்து உடைத்த கடலை பருப்புகளை / தேங்காய் பருப்புகளோ தெரிந்தவர் மூலமாக சந்தையில் வாங்கி  அதை நீங்களே ஒரு மர செக்கு வைத்திருப்பவரிடம் சென்று உங்கள் பருப்புகளை கொடுத்து , அதில்
எண்ணெய் ஆட்டி வைத்து கொள்ளுங்கள். ஒரு 10 or 20பேர் சேர்ந்து செய்வதால் , வேலை ஒன்றும் பெரிய சிரமாக இருக்காது. ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் செய்யலாம்.அல்லது உங்களுக்கு யாராவது  கிராமபுற  நண்பர்கள்/உறவினர்கள்  இருந்தால் அவர்கள் மூலமாக இதை செய்யுங்கள்.அவர்களை சிறிதளவு லாபம் எடுத்து கொள்ள சொல்லிவிட்டு , நீங்கள் தரமான எண்ணெய்யை பெறலாம்.

மேலும் சல்பர் இல்லாத தேங்காய் எண்ணெய்  உங்களுக்கு அழகாக பேக் (pack ) செய்து  லேபிள் ஒட்டி  யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். அதிக உற்பத்தி (mass production ) என்று வந்து பிராண்ட்(brand)   என்று வந்து விட்டாலே அங்கு தரம் கட்டாயம் (compromise)
குறைக்க பட்டிருக்கும்.  விற்பனை இல்லாவிட்டால் பல மாதங்கள் ஸ்டாக்கில்  இவை இருக்க வேண்டும் எனவே கட்டாயம் அது கெட்டு போகாமல் இருக்க பல வேதி பொருள்கள்  எண்ணையில் சேர்க்கப்பட்டிருக்கும்.

உண்மை உணர்வோம்
நல்ல தரம் வேண்டுமா? சிறிது முயற்சி எடுத்து தான் பெற வேண்டும்.  

2 comments:

  1. பாரம்பரிய முறையில் மரச்செக்கில் ஆட்டிய முதல் தரமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்,கடலை எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் எங்களிடம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். தொடர்பிற்கு: 7305111593,7695908556
    பாரம்பரிய முறைப்படி செக்கு மற்றும் உலக்கை இரண்டும், வாகை மரத்தினால் செய்யப்பட்டு மிகக் குறைந்த வேகத்தில் சுழன்று உயிர்ச் சத்துக்களும், தாதுக்களும் வைட்டமின்களும் அழியாமல் சுகாதாரமான முறையில் உற்பத்தி செய்வதே மரச்செக்கு எண்ணையின் சிறப்பு....

    ReplyDelete
  2. பேலியோ எங்க காணும்
    அன்புடன்
    பாலு

    ReplyDelete