Tuesday, October 25, 2016

படுக்கை அறை கேமரா

உங்கள் படுக்கை அறையில் ஒரு கேமரா வைத்து அங்கு நடப்பவற்றை பதிவு செய்து நீங்கள் facebook -ல்  upload  செய்விர்களா?

மாட்டீர்கள் தானே! பிறகு ஏன் உங்கள் மருத்துவ அறிக்கையை பல ஆயிரம் பேர் வந்து போகும் ஒரு குழுவில் பொதுவில் பதிவிடுகிறீர்கள்.உங்களுக்கு தெரியுமா "டெஸ்டோஸ்டெரோன்" ஹோர்மோன் அளவுகளை வைத்து கொண்டு மிகவும்  எளிதாக உங்கள் செக்ஸ் வாழ்க்கையை கணித்து விடலாம். "டெஸ்டோஸ்டெரோன்"  அளவுகளை பதிவிடுவதும், ஒரு விதத்தில் கேமரா வைத்து அங்கு நடப்பவற்றை ஒளிபரப்புவது போன்றே. உங்களை சுற்றி உள்ள உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள் ,எதிரிகள் என அனைவரும் இது போன்ற  தகவல்களை  வைத்து கொண்டு உங்களை influence செய்து விட முடியும். இலவச ஆலோசனை என்றால் , ஒன்றும் கண்ணுக்கு தெரியாது. கொஞ்சமாவது யோசியுங்கள்.

அமெரிக்கா  சென்று சிலகாலம் அங்கு தங்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மேதாவிதனம்  வந்துவிடுகிறது, உடல் நலம் சரி இல்லாத தன் வெள்ளைக்கார நண்பணை  விசாரிக்கும்போது "இப்போது எப்படி இருக்கிறீர்கள்?"  என்று மட்டுமே கேட்க முடியும் , அதை தாண்டி  "உங்கள் உடல் நிலைக்கு என்ன?" என்று கேட்க முடியாது ,கேட்டால் அது மிகவும் அந்தரங்கமான கேள்வியாக பார்க்கப்படும்.நாளைடைவில் இவர்களும் இதையேதான் மற்றவர்களிடம் எதிர்பார்கிறார்கள் , ஆனால் இங்கு இந்திய ஆட்டு மந்தை கூட்டங்கள்  என்றால் பல ஆயிரம் பேரை கொண்டுள்ள ஒரு குழு மேடையில் ,தங்கள் மருத்துவ அறிக்கையை பொதுவில் பதிவிட்டு ,தங்கள் பிரச்சனைகளை சொல்லி கதற வேண்டும் என எதிர்பாகிறார்கள். இதை கேட்டால் , நாங்களா  கேட்க சொன்னோம் ,தேவை என்று அவர்கள் தானே வருகிறார்கள் என்று ஒரு போலீஸ்காரர் கண்கள் சிவக்க கோபத்துடன் வருவார்.

மற்றவர்களின் அந்தரங்கதிற்கு  உரிய மரியாதை கொடுங்கள், இன்று மிக பெரும்பான்மையான முகநூல்(facebook) உபயோகிபாளர்களுக்கு சைபர் கிரைம் மற்றும் அவர்களுடைய தகவல்களின் முக்கியம் தெரிவதில்லை.

ஆரோக்கியத்துடன் கொஞ்சம் டெக்னாலஜியும் தெரிந்து வைத்து கொள்வோம்.

2 comments:

  1. என்ன போடறதுன்னு தெரியாமலே போடுற
    அன்புடன்
    பாலு

    ReplyDelete