Tuesday, October 25, 2016

ஆண்மை குறைபாடும் பேலியோவும்.

டெஸ்டோஸ்டெரோன் எனப்படுவது ஆண்களின் உடலில் சுரக்கும் ஒரு முக்கிய ஹார்மோன். இது தான் ஒரு  ஆண்குழந்தை  வளர்ந்து முழு ஆண்மகனாக உருமாற  உதவிசெய்வது. ஆண்களுக்கு உரிய இயல்பான மீசை ,தாடி,உடல் ரோமங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிகளை உறுதிப்படுத்துவது,எலும்புகளுக்கு வலுவளித்தல் ,பாலுணர்ச்சியை தூண்டுவது ,தோள் ,கைகள் ,கால்கள்,மார்பு போன்றவற்றிக்கு ஆண்களுக்குரிய தோற்றத்தையும் மிடுக்கையும் கொடுப்பது.இதேபோல் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹோர்மோன் பெண்களின் உடலில் சுரப்பது ,இது பெண்களின் மென்மை,மார்பக வளர்ச்சி,மற்ற பெண்மை தொடர்பான அனைத்திற்கும் இந்த ஹோர்மோன் தான் காரணம். ஒவ்வொரு ஆணின் உடலிலும்  டெஸ்டோஸ்டெரோன் மட்டுமின்றி பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனும் சிறிதளவு சுரக்கிறது, இதேபோல் பெண் உடம்பிலும் ஆண்  ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் குறைந்த அளவில் சுரக்கிறது... ஆணின் உடலில்  ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும்போது,ஆணிடம் பெண்தன்மை அதிகரிக்கும் அப்போது   நடை,பேச்சு,நளினம் போன்றவை  பெண்களை போன்றே இருக்கும் ,அதே போல் பெண்களுக்கு டெஸ்டோஸ்டெரோன் அதிகரிக்கும்போது அதிக உடல் ரோமா வளர்ச்சி,ஆண்கள் போல் கரகர குரல் போன்ற  தோன்றும்.

பொதுவாக இந்த டெஸ்டோஸ்டெரோன் அளவுகள் 20 வயதை கடந்தவுடன் படிப்படியாக குறைய துவங்கும்.18 வயதிலிருந்து 20 வயதுவரை இதன் அளவுகள் ஆணின் உடலில் மிக உச்சத்தில் இருக்கும், அப்போது ஆண்கள் மிகவும் துடிப்புடன் இருப்பார்கள் ,இந்த பருவத்தை தான்  கிராமப்புறங்களில் இளமைமுருக்கு என கூறுவார்கள்.இந்த டெஸ்டோஸ்டெரோன் அளவு உடலில் குறையும் போது உடலில் சக்தி குறைவு, உடல் தசைகள் வலுவிழத்தல் ,விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல்,எலும்புகள் பலகீனம் , பாலுணர்வில் நாட்டமின்மை  போன்றவை இயல்பாக தோன்றும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.."இன்றைய காலகட்டங்களில் வயதாவது மட்டும் டெஸ்டோஸ்டெரோன் அளவுகள் குறைவதற்கு காரணமல்ல, நமது உணவு பழக்க வழக்கங்கள்,உடல் நிலை பேணும் முறை போன்றவையே டெஸ்டோஸ்டெரோன் அளவுகளை பெரும்பாலும் தீர்மானிக்கிறது" என கூறுகிறார் பிரபல  சிகாகோ பல்கலைக் கழக  ஆராய்சியாளர் ஈவ் வான்.

சரி எதனால் டெஸ்டோஸ்டெரோன் அளவுகள் குறையும்?

உடற்பயிற்சியின்மை
போதிய உறக்கமின்மை (தொடர்ச்சியாக 5 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவது.. )
மனஅழுத்தம்
hiv/கான்செர் போன்ற நோய்களால்
கீமோதெரபி  சிகிச்சை
SHBG(Sex hormone-binding globulin) ப்ரோட்டீன் அளவுகள் ரத்தத்தில் மிக அதிகமாக இருப்பது.


மேற்கண்ட நான்கில் ,அதில் SHBG யினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.ஏனென்றால் இவர்  தான் பேலியோவுக்கும் மிக நெருங்கிய உறவினர்.SHBG எனப்படுவது கல்லிரலில் உருவாகும் ஒரு புரத வகையை சார்ந்தது இது  டெஸ்டோஸ்டெரோன்,ஈஸ்ட்ரோஜென் மற்றும் டிஹைட்ரொடெஸ்டோஸ்டெரோன்(testosterone, dihydrotestosterone (DHT), and estradiol) போன்றவற்றை ஒன்றிணைத்து தன்னுள்கொண்டு ரத்தத்தில் கலந்து பின் அனைத்து திசுக்களுக்கும் தன்னை அளிக்கிறது , மேலும்  திசுக்கள் எவ்வளவு டெஸ்டோஸ்டெரோனை எடுத்து கொள்ள வேண்டும் என்பதையும்  இதுவே தீர்மானிக்கிறது..இன்சுலின் என்ற ஹோர்மோன் தான் SHBG யில் டெஸ்டோஸ்டெரோனையும் மற்ற ஹோர்மோன்களையும் பிணைப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.உடலில் இன்சுலின் அளவு தொடர்ச்சியாக மிக குறைவாக இருக்கும்போது இந்த ஹோர்மோன் பிணைப்பில் ஏற்படும் கோளாறுகளால் SHBG அளவு ரத்தத்தில் மிக உயர்ந்து உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டெரோனை அனைத்து திசுக்களுக்கும் கிடைக்காமல் செய்து விடுகிறது..t ype 2 நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயை வெல்கிறேன் என்ற பெயரில் பேலியோ  டயட் மூலம் தொடர்ச்சியாக (low corb ) மிக குறைந்த மாவு சத்துள்ள உணவு பொருட்களை எடுக்கும்போது ,உடலில் இன்சுலின் அறவே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு SHBG,டெஸ்டோஸ்டெரோன் பிணைப்பில் சிக்கலை உருவாக்கி சில வருடங்களில் அவர்களை முழுமையான மலட்டு தன்மை உடையவர்களாக மாற்று விடுகிறது...உடலில் இன்சுலின் போதிய அளவு சுரக்காவிட்டாலும் ,மாத்திரை மூலமாகவோ , ஊசி மூலமாகவோ இன்சுலின்  கட்டாயம் எடுத்து கொள்ளவேண்டும். இன்சுலின் பற்றாக்குறை குளுகோஸை திசுக்களுக்கு அளிப்பது மட்டுமின்றி இன்னும் பல முக்கியமான உடல் செயல் பாடுகளுக்கு அவசியம் என்பதையும்  புரிந்து  கொள்ளவேண்டும் .

பிரபல பாலியல் மருத்துவர்  டானியல் ஸ்டிக்களேர் (Daniel Stickler) ,சமீப காலங்களில் பேலியோ உணவுமுறையை பின்பற்றுபவர்கள் ,பாலியல் பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறுகிறார். அவரிடமும் வரும் பேலியோ நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்.

http://primaldocs.com/members-blog/testosterone-shbg/

The following can cause increased SHBG levels:


liver disease (hepatitis, alcohol)
low insulin levels (healthy people, especially eating paleo)
calorie restriction
green tea
increased protein/carb ratio (paleo eating)
certain medications


எனவே  அரைவேக்காட்டுத்தனமான ஆங்கில கட்டுரைகளின் மொழிபெயர்புகளை  நம்பாமல் , உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை பின் பற்றுங்கள்.கைப்புண்ணை குணப்படுத்த கண்ட  புத்தகங்கள்  படித்து பின் கையை இழந்தவன் கதைபோல் ஆகிவிடும்.எனவே  அறிவுபூர்வமாக செயல்படுவோம் , படித்த அறிஞர்கள் சொல்லும் வழி  நடப்போம்.வலைபூ மேயும் நண்பர்களின் மருத்துவ அறிவில் , உங்கள் டயட் மற்றும் வாழ்க்கையை தேட வேண்டாம்.

2 comments:

  1. என்னத்த பண்ணி டொலரதுனே தெரிய மாட்டிங்குது ஒருத்தன் இத பண்ணுங்கறான் இன்னோருத்தன் அத பண்ணாதிங்கறான். போங்கடா.....

    ReplyDelete
  2. Neengal enge kuripittula anaithu prachanaiyum earkanave erupavaigal thaane... edhai neenga pinpattrum unavu murai yal thane vandhadhu... paleo nu kanda marundha sapdalaye.... fodd stlye thane marapoguthu.. ean burger pizza kadai thirakkum podhulam sir enga erundheenga.... ? kaasu varuthuna....enna venalum eludhuduveengalo.... bull shit...

    ReplyDelete