Thursday, October 27, 2016

பேலியோ டயட் புத்தகம் திறனாய்வு . அத்தியாயம் 1


                       முதல் அத்தியாயம் இந்த சமுதாயத்தில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம்,புற்றுநோய் மாரடைப்பு,உடல்பருமன் போன்ற நோய்ககள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை பற்றியும், அதற்கான முழுமையான தீர்வு  தரும் முயற்சியை மருத்துவ உலகம் கைவிட்டுவிட்டதாகவும் ,இப்போதுள்ள மருத்துவர்களுக்கு, ஏன்  இந்த நோய்கள் வருகின்றன என தெரியவில்லை  எனவும்,இந்த நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் போதிய அறிவு கிடையாது எனவும் தற்கால மருத்துவ உலகத்தின் மீதும் ,மருத்துவர்கள் மீதும் நூலாசிரியர் கடுமையாக சாடுகிறார்.உலகின் பல மூலைகளிலும் உள்ள மருத்துவ  ஆரய்ச்சியாளர்கள் தங்கள் வாழ்நாளை முழுவதுமே மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அர்ப்பணித்து புதிய மருந்துகளையும், பல ஆராய்சி கட்டுரைகளையும் சமர்ப்பித்து வருகிறார்கள்.நூலாசிரியர் சாதாரணமான  (இந்த புத்தகமே பல மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு என்பதை மறந்துவிட்டு)சில வார்த்தைகளில் ஒட்டு மொத்த மருத்துவ உலகத்தையும், அனைத்து மருத்துவர்களின் உழைப்பையும்,சேவையையும் மிகவும் அலட்சியப்படுத்தி தனது அத்தியாயத்தை தொடங்குகிறார்.

மேலும் நமது பாரம்பரிய உணவுகளான சிறுதானியங்கள் கம்பு,கேழ்விரகு ,ராகி,தினை போன்றவைகள் இந்த நோய்களின் தாக்கத்தை ஓரளவுதான்  குறைப்பதாக  குறை கூறி , இவை நோய்களுக்கு முழு தீர்வு தர இயலாது எனவும் அவசர அவசரமாக முடிவுகட்டி,இந்த உணவுகளை உண்டு மிகவும் ஆரோக்கியமாக 100 வயது வாழ்ந்த நாம் தாத்தா & பாட்டிகளை மறந்து விட்டு நம்மை நியூஸிலாந்து டோக்லு தீவுக்கு 1800 ஆம் வருடங்களுக்கு, பன்றி,மீன்,கோழி மாமிசங்களை உண்ணும் பழங்குடி மக்களிடம் நம்மை அழைத்து செல்கிறார்.அங்கு அவர்கள் உண்ணும் உணவு முறையும் ,அவர்களுடைய தோற்றத்தை பற்றியும் சிலாகித்து கூறும் ஆசிரியர் அவர்களுக்கு புற்றுநோய்,சர்க்கரை,ரத்தஅழுத்தம் போன்றவை இல்லாததை கண்டு மிகவும் வியக்கிறார்.நம் அனைவருக்கும் தெரியும் இரண்டு தலைமுறைக்கு முன் இந்த நோய்கள் எவருக்கும் தமிழகத்தில் கிடையாதென்று. 50 வருடங்களுக்கு முன் நாம் ஆரோக்கியமாக வாழ்ந்தோம்,இப்பொது அதில் என்ன தவறு என்று பார்த்தாலே, நம் பிழையை சரிசெய்து ஆரோக்கியமாக வாழலாம்.ஆனால் இவர் பேலியோ உணவு முறை எனும் எடை குறைப்பு உணவுமுறையை இந்த நோய்களுக்கு தீர்வாக மாற்ற முயல்வதும் ,அதற்கான சப்பைக்கட்டு ஆதாரங்களை உருவாக்கவே நம்மை  டோக்லு தீவுக்கு அழைத்து செல்கிறாரோ எண்ணற்ற சந்தேகம் வலுக்கிறது. பச்சை இறைச்சியில் வைட்டமின் A இருப்பதாய் ஒரு பழங்குடி கிழவர் சொன்னதும்  அவர் அறிவை புகழும் இவர், நமது சித்தர் பாடல்களில் அனைத்து விதமான நோய்களுக்கும்,வைட்டமின் குறைபாடுகளுக்கும் எண்ணற்ற மருத்துவ தகவல்கள் உண்டு என்பதையும் வேண்டுமென்றே மறைத்து,முற்றிலும் தமிழர் உணவு மற்றும் மருத்துவ முறைகளை இருட்டடிப்பு செய்திருக்கிறார்.

இந்த அத்தியாயத்தின் கடைசியில்  5 இட்லி சாம்பார் சட்னியுடன் சாப்பிட்டால் அது 20 ஸ்புன் சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம் என தன் அரிய  கண்டுபிடிப்பை முன் வைக்கிறார்.

சாம்பார் எதனால் செய்யப்படுகிறது?
தக்காளி,வெங்காயம்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு,கறிவேப்பிலை,துவரம்பருப்பு,கடலை பருப்பு,சீரகம்,பூண்டு,ஏதாவது இரு வகை காய்கறிகள்,கடுகு,இஞ்சி எண்ணெய் போன்றவற்றின் கலவை.
இட்லியின் மூலப்பொருள் என்ன?
உளுந்தம்பருப்பு ,அரிசி

இட்லி சாம்பார் என்பது சரியான விகிதத்தில் அனைத்து சத்துக்களும், மஞ்சள் தூள்,கடுகு,மிளகாய் தூள் போன்றவற்றில் கான்செர் தடுப்பு மூல பொருளகளும் நிறைந்துள்ளது.சாம்பார் ,ரசம் போன்றவை நமது முன்னோர்கள் கண்டுபிடித்த மூலிகை ரசங்களே,அதையே தினமும் நாம் உண்டு வந்து இருக்கிறோம். ஆனால் இதை எடுக்கும் அளவு, உடல் உழைப்பு குறைவு , கற்று நீர் மாசு, போன்றவைவே நம்மை இந்த ரத்த அழுத்தம்,புற்றுநோய் மாரடைப்பு,உடல்பருமன் போன்ற நோய்களுக்கு உட்படுத்துகிறது.. இட்லி சாம்பார் என்பது  உலகின் சிறந்த காலை உணவுகளில் ஒன்று என (WHO) world health  organization  பரிந்துரைத்துள்ளது. (http://v6news.tv/world-health-organisation-reported-idli-is-the-best-recipe-v6-spot-light)..சாம்பார்,ரசம் போன்றவை , நம் முன்னோரின் பல ஆண்டுகால ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட உணவு பொருள்களே,இந்த உணவு பொருட்களை , 50 ஸ்புன் சர்க்கரையுடன் ஒப்பிடுவது எவ்வளவு வக்கிரமானது.மொத்தத்தில் கம்பு கேழ்விரகு ,ராகி , அரிசி உணவுகளை அரை கிலோ சர்க்கரைக்கு சமம் என தீர்ப்பு எழுதி தனது முதல் அத்தியாயத்தை முடிக்கிறார்.

முதல் அத்தியாயம் படித்து முடிந்ததும், வாசகர்கள், நம் பாரம்பரிய உணவு முறைகளை தவற கருதி அனைத்தையும் ஒதுக்கிவிட வேண்டும்,பிறகு மெல்ல அசைவ உணவு முறைக்கு மாறினால் கந்தர்வர்கள் போல் தோற்றம் கிடைக்கும் என ஆசை மனதில் துளிர்விட வேண்டும், என்ற நோக்கில் எழுதப்பட்ட முதல் அத்தியாயம், அதற்கான நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறது.









5 comments:

  1. Ethilum Kurai kandu pidipathu elithu.

    ReplyDelete
  2. Even chicken dishes are made with Ingredients like Turmeric, Garlic, onion, ginger etc., sambhar and vegetables may be good. But idli which is having high carb is not good. Our ancestors ate idlis or whatever high carb food and worked in agri fields, walked kms daily. Our current lifestyle will not suit high carb foods, result is Diabetes

    ReplyDelete
  3. அருண் ராஜ் ரொம்ப மரமண்டை போல
    அன்புடன்
    பாலு

    ReplyDelete