Thursday, October 20, 2016

கிட்னி செயலிழப்பு!!

"கிட்னி செயலிழப்பு மற்றும் கிட்னி சம்மந்தமான நோய்கள், சாதாரண உணவு உண்பவர்களை விட அசைவ ப்ரோடீன் அதிகம் எடுப்பவர்களுக்கு மூன்று மடங்கு அதிகம் ". இது அசைவ புரதங்களை பற்றி தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் வெஸ்ஸின் அவர்களுடைய கருத்து .மேலும் அவர் முதல் கொஞ்ச நாட்கள் இந்த அசைவ புரத உணவுகள் உடலுக்கு நன்மை தருவது போல் தோன்றினாலும் , தொடர்ச்சியாக எடுக்கும்போது இது கிட்னி செயலிழப்பில் முடியும் என்று கூறுகிறார்.
மேலும் நீங்கள் கூகிள்லில் "animal protein + kidney disease " என தேடினால் அனிமல் ப்ரோட்டினினின் தீமைகளை விளக்கும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை காணலாம்.. வாரம் ஒருமுறை அதிக பட்சம் இருமுறை அசைவ உணவுகள் உண்பதுவும் , சரியான அளவில் புரதங்களை எடுப்பதும் நீண்டநாள் கிட்னியை பாதுகாக்கும் சரியான வழிமுறை.

6 comments:

  1. இதை படியுங்கள்

    பகுதி 1

    பேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா?

    Dr. Arunkumar, MD(Pediatrics)

    பேலியோ உணவுமுறை என்றதுமே, கிட்னி சட்னி ஆகும், சிறுநீரகம் சின்னாபின்னமாகும் போன்ற விமர்சனங்கள் மருத்துவர்களிடமும் சில பொது மக்களிடமும் எழுவது சகஜமாகிவிட்டது. ஊடகங்களும் இது போன்ற ஆதரமில்லாத தவறான ஆனால் சுவாரசியமான பரபரப்பு மிக்க செய்திகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.

    இதன் பின்னணி என்ன?

    பேலியோ உணவுமுறை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கறியும் கோழியும் முட்டையும். இறைச்சி வகைகளில் புரதம்(protein) அதிகம் இருப்பதால் சில வருடங்களில் சிறுநீரக பாதிப்பு உண்டாகும் எனும் தவறான கருத்து நிலவுகிறது.

    புரதம் என்றால் என்ன?

    நம் உடலின் கட்டுமானத்திற்கு உதவும் building blocks தான் புரதம்.
    Cytoskeleton எனப்படும் நமது செல்களின் அஸ்திவாரம் புரதம்.
    actin, myosin எனப்படும் புரதங்கள் தான் நம் தசைகளின் முதுகெலும்பு.
    நாம் உண்ணும் உணவை செரிமானம் ஆக்க உதவும் அனைத்து என்சைம்களும் புரதம் தான்.
    இன்சுலின், பிட்யூட்டரி போன்ற அதிமுக்கிய ஹார்மோன்கள் புரதம் தான்.
    நோய் எதிர்ப்பு சக்தி என்று கூறுகிறோமே, அந்த இம்யூனோக்ளோபுளின் புரதம் தான்.
    இது மட்டுமில்லாமல் உடலில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும் உதவும் பெரும்பாலான என்சைம்கள் புரதம் தான்.
    சுருக்கமாகச் சொன்னால் புரதம் தான் நம் உடலின் உயிர்நாடி.

    எவ்வளவு புரதம் ஒருநாளைக்கு தேவை?

    ஒரு சராசரி மனிதனுக்கு அவனது உடல் எடையை போல 0.7 மடங்கு கிராம் புரதம் தேவை. அதாவது அவனது உடல் எடை 80 கிலோ இருந்தால், அவனுக்கு 56 கிராம் புரதம் தினசரி தேவை. பிரசவமாக இருக்கும் பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், குழந்தைகளுக்கு(கிலோவுக்கு 1.5 கிராம் வரை) புரதம் இன்னும் அதிகம் தேவைப்படும். இதில் குறிப்பாக, இந்தியாவில் உள்ளது போன்று, பெரும்பாலும் சைவ உணவுகளில் இருந்து புரதம் எடுத்தால், அதன் குறைந்த தரம் காரணமாக இன்னும் அதிக புரதம்(ஒரு கிலோ எடைக்கு 1 கிராம்) தேவை.
    இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவு குறைந்தபட்ச அளவு மட்டுமே. இதற்கு குறைந்து புரதம் எடுத்தால் தளர்வு, தசை இழப்பு, உடல் சோர்வு மற்றும் பல கோளாறுகள் உடலில் ஏற்படும்.

    ReplyDelete
  2. பகுதி 2

    மிருகங்களின் புரதம் உடலுக்கு கெடுதலா?

    இது தான் மிகப்பெரிய காமெடி.
    புரதங்களின் மூலக்கூறுகள் அமினோ ஆசிட் எனப்படும். 20 வகை அமினோ ஆசிட்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான புரதங்கள் உடலில் தயார் செய்ய படுகின்றன. இதில் 9 வகை அமினோ ஆசிட்கள் உணவில் இருந்து மட்டும் தான் உடலுக்கு கிடைக்க செய்ய வேண்டும். இவை essential amino acids என்றழைக்கப்படும். இவை அனைத்தும் ஒரு சேர கிடைப்பது முட்டை மற்றும் மிருக புரதங்களில் மட்டும் தான். அரிசியிலோ பருப்பிலோ சுண்டலிலோ அனைத்து essential அமினோ ஆசிட்கள் கிட்டுவதில்லை. எனவே தான் பருப்பு சுண்டல் வகைகளை உணவியல் நிபுணர்கள் poor man's meat (ஏழையின் இறைச்சி) என்றழைப்பர். முட்டை புரதத்தை reference protein என்றழைப்பர். அதாவது மற்ற எல்லா உணவு வகைகளிலும் எவ்வளவு புரதம் இருக்கிறது, அதன் தரம் என்ன என்பதை முட்டையுடன் ஒப்பிட்டுத் தான் விளக்குவார்கள். நாம் பள்ளி செல்லும்போது எல்லா பாடத்திலும் ஒருவன் முதல் ரேங்க் வாங்குவானே, எல்லாரும் அவனை மாதிரி படிக்க வேண்டும் என்பார்களே, அவனைப் போல.

    பேலியோ அதிக புரதம் எடுக்கும் உணவுமுறையா?

    இது பொதுவாக மக்களிடமும் மருத்துவர்களிடமும் நிலவும் தவறான கருத்து.
    பேலியோ என்பது
    - குறைந்த மாவுச்சத்து (carbohydrate)
    - அதிக கொழுப்பு (fat)
    - தேவையான அளவு புரதம் (protein)
    எடுக்கும் உணவுமுறை.
    பொதுவாக இந்தியர்கள் உண்ணும் உணவில் இருப்பது 30-40 கிராம் புரதங்களே. அதுவும் தரம் குறைந்த தானிய புரதங்கள்.
    பேலியோ உணவில் கிட்டத்தட்ட 80 முதல் 100 கிராம் வரை உயரிய மிருக புரதங்கள் கிடைக்கும். அனைத்து essential அமினோ ஆசிட்களும் கிட்டும். உடல் தேவையான அளவு புரதங்களைப் பெற்று செழிப்புடன் விளங்கும்.

    புரதம் நல்லது சரி, அதிகபட்சம் தினம் எவ்வளவு எடுக்கலாம்?

    ஒரு சராசரி மனிதன் ஒரு கிலோவுக்கு 2.5 கிராம் என்கிற அளவு வரை புரதங்கள் எடுக்கலாம். எந்த பிரச்னையும் இல்லை. அதாவது ஒரு 80 கிலோ எடையுள்ள மனிதன் தினசரி 200 கிராம் வரை எடுக்கலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது. இது ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல். ஆனால் நம் உடலால் அதிகபட்சம் ஜீரணம் செய்யக்கூடியது கிட்டத்தட்ட 375 கிராம் புரதம். (Theoretical maximum)
    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16779921
    கவனிக்கவும்: பேலியோவில் பரிந்துரைப்பது 80-100 கிராம் புரதங்களே.

    சரி, 56 கிராம் குறைந்தபட்ச தேவை எனும்போது, 150 கிராம் எடுத்தால் என்ன ஆகும்?
    1. பாடி பில்டிங்கில், விளையாட்டு துறையில் உள்ளோர், அதிக புரதம் எடுக்கும்போது அந்த புரதங்கள் actin மற்றும் myosin ஆக மாறி, தசைகளை மெருகேற்றும்.
    2. குறைந்த கார்போஹைட்ரேட் உணவுமுறையை பின்பற்றும் ஒரு சராசரி மனிதர் அதிக புரதங்கள் எடுத்தால், மிச்ச புரதங்கள், gluconeogenesis எனும் செயல் மூலம், உடலில் குளுக்கோஸ் ஆக மாறி, மூளை, சிவப்பு அணுக்கள், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு சக்தி தரும்.
    3. மிச்சக் கழிவுகள் யூரியாவாக மாறி, சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும்.

    இந்த கடைசி பாயிண்டை தான் மக்கள் பிடித்துக்கொண்டு பேலியோவைத் தூற்றிய வண்ணம் உள்ளனர்.

    ReplyDelete
  3. பகுதி 4

    இது மட்டும் இல்லாமல், பேலியோ போன்றதொரு குறைந்த மாவுச்சத்து, அதிக கொழுப்பு, தேவையான அளவு நல்ல புரதம் எடுக்கும் உணவுமுறையில், diabetic nephropathy எனும் நீரிழிவினால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு நோய் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், அது பூர்த்தி குணமடையவும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சிலருக்கு கீட்டோஜெனிக் பேலியோ டயட் மூலம், ஆரம்பக்கட்ட diabetic nephropathy சரியாகி பழைய நல்ல நிலைமைக்கு சிறுநீரகம் திரும்பிவிட்டது என்றும் case ரிப்போர்ட்கள் உள்ளன.
    http://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0018604
    http://nutritionandmetabolism.biomedcentral.com/articles/10.1186/1743-7075-3-23

    கவனிக்கவும்: சிறுநீரக கோளாறுகளுக்கு டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களில் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதத்திற்கு மூல காரணம் diabetes(நீரிழிவு நோய்) மற்றும் hypertension(உயர் இரத்த அழுத்தம்). இவற்றை குணமாக்கவோ, ஏற்கனவே ஏற்பட்ட சிறுநீரக கோளாறை சரி செய்யவோ, தற்போது எந்த ஒரு மருத்துவமோ மருந்துகளோ இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். டயாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.

    மறுபடியும் முதல் கேள்விக்கே வருவோம்.

    பேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா?

    1. பேலியோ உணவு முறையால் சிறுநீரக பாதிப்பு வரும் என்று நினைப்பது அரை வேற்காட்டுத்தனமான ஆதாரம் அடிப்படைகளற்ற குற்றச்சாட்டு.

    2. வேண்டுமானால், பேலியோ உணவுமுறை உங்களைப் பல எதிர்கால சிறுநீரக பாதிப்புகளில் இருந்து காப்பாற்றும். உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிப்பதன் மூலம் உங்கள் சிறுநீரகங்களை செயலிழப்பில் இருந்தும், உங்களை டயாலிசிஸில் இருந்தும், மாற்று சிறுநீரகங்களுக்குக் காத்துக் கிடக்கும் கொடிய நிலைமையில் இருந்தும் காப்பாற்றும்.

    எனவே, இல்லாத ஒரு பிரச்சனைக்கு பயந்து மாவுச்சத்து உணவு உண்டு, உங்களின் சிறுநீரகங்களை நீரிழிவு நோய்க்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் பலி கொடுக்க வேண்டுமா?
    அல்லது பேலியோ உணவு முறை பின்பற்றி, உங்கள் சிறுநீரகங்களை பொன் போல பாதுகாத்துக்கொள்ள வேண்டுமா?
    நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!!

    #kidney, #paleo, #renalfailure, #dialysis, #nephropathy, #highprotein, #protein #renal

    ReplyDelete
  4. இதையும் படியுங்கள்

    குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட்டால் யூரியா கூடி சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுமா ?
    OCTOBER 10, 2016 பேலியோ நிபுணர் மரு.ஜா.புருனோ., M.B.,B.S, M.CH.,

    குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட ஆரம்பித்து சில வாரங்கள் கழித்து இரத்த பரிசோதனை செய்யும் போது முன்னர் இரத்தத்தில் யூரியா இருந்த அளவை விட சில புள்ளிகள் அதிகரித்திருப்பதை காணலாம்.
    சிறுநீரக பிரச்சனையில் (கிட்னி பெயிலியர்) இரத்தத்தில் யூரியா அதிகரிக்கும் என்ற தகவல் அறிந்த பலரும், குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட்டவுடன் சிறுநீரகங்கள் செயலிழக்கின்றன என்ற தவறான புரிதலுக்கு வந்து விடுகிறார்கள்.
    சிறுநீரகங்கள் செயலிழந்தால் இரத்தத்தில் யூரியா அதிகரிக்கும்
    ஆனால்
    இரத்தத்தில் யூரியா அதிகம் என்றால் அதற்கு ஒரே காரணம் சிறுநீரக செயலிழப்பு மட்டும் அல்ல

    இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

    -oOo-

    குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட்டால் யூரியா கூடி சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுமா ?
    குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட்டால் யூரியா கூடி சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுமா ?
    உணவில் இருக்கும் புரதம் உடைக்கப்பட்டு அது யூரியாவாக மாறுகிறது
    இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்தால் அதனால் பல பாதிப்புகள் ஏற்படும் . மூளை வேலை செய்யாது. இதை யூரிமிக் என்கபலோபதி என்பார்கள்
    எனவே
    இந்த யூரியாவை வெளியேற்ற வேண்டும்.
    அதற்கு உடலில் உள்ள உறுப்பு(கள்) சிறுநீரகம் (ங்கள்).
    -oOo-

    ஒரு அணையை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
    அதில் நீர் வருகிறது.
    அதே போல் நீர் வெளியேறுகிறது.

    -oOo-

    உள்ளே வரும் நீரை , உடலில் உற்பத்தியாகும் யூரியாவுடன் ஒப்பிடுங்கள்.
    வெளியேறும் நீரை, சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும் யூரியாவுடன் ஒப்பிடுங்கள்.

    -oOo-

    அணையில் நீர் அளவு எப்பொழுது அதிகரிக்கும் ?

    அதிகம் நீர் வந்தால்.
    குறைவான நீர் வெளியேறினால்.
    -oOo-

    இரத்தத்தில் யுரியா அளவு எப்பொழுது அதிகரிக்கும்

    அதிகம் யுரியா உற்பத்தி செய்யப்பட்டால்
    குறைந்த யுரியா வெளியேறினால்

    ReplyDelete
  5. பகுதி 2
    இரத்தத்தில் யூரியா அளவு எப்பொழுது அதிகரிக்கும்

    அதிகம் புரதம் உட்கொண்டால்
    சிறுநீரக செயல்பாடு குறைந்தால்
    இது தவிர கீழ்க்கண்ட காரணங்களினாலும் இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும்

    நீர்ச்சத்து குறைபாடு Salt and Water Depletion
    வாந்தி Vomiting
    பேதி Diarrhea
    இரத்த வாந்தி Haemetemesis
    இரத்தப்போக்கு Hemorrhage
    பெருங்குடல் அழற்சி Ulcerative Colitis
    அடிசன்ஸ் நோய் Addison’s disease
    கடிய முடிச்சச்சிறுநீரகவழற்சி Acute Glomerulonephritis
    இரண்டாம் வகை சிறுநீரகவழற்சி Type II Nephritis
    சிறுநீரகக்கடினம் Malignant Nephrosclerosis
    சிறுநீரக சீழ் Pyelonephritis
    பாதரச நச்சேற்றம் Mercury Poisoning
    சிறுநீரக நீர்க் கோர்வை Hydronephrosis
    சிறுநீரக காசநோய் Renal Tuberculosis
    சிறுநீரக கல் Renal Calculi
    சுக்கிலவகம் பெருத்தல் Prostate enlargement
    சிறுநீர் வழிப்பாதை புற்றுநோய்கள் Tumours of Urinary Tract
    -oOo-

    எனவே
    இந்த உணவு முறையில் புரதம் மட்டுமே அதிக அளவு உட்கொள்வதால் கிட்னிக்கு பிரச்சனை வராது
    ஆனால்
    ஏற்கனவே பிரச்சனை உள்ள கிட்னியால் இந்த அதிக அளவு யூரியாவை வெளியேற்ற முடியாவிட்டால், யூரியா அளவு இரத்தத்தில் அதிகரித்து அதனால் மூளைநலிவு (uremic encephalopathy) ஏற்பட்டு மூளைசெயல்பாடும் பாதிக்கப்படலாம்

    -oOo-

    அப்படி என்றால் என்ன உணவு உட்கொண்டால் சிறுநீரக பாதிப்பு வரும் ?
    மாவுச்சத்து அதிகம் உட்கொண்டால் சிறுநீரக பாதிப்பு வரும்.

    -oOo-

    சிறுநீரக பாதிப்பு இல்லாதவர்கள், வருங்கால சிறுநீரக பாதிப்பை தவிர்க்க உட்கொள்ள வேண்டிய உணவு எது ?
    குறைமாவு நிறைகொழுப்பு உணவு.

    -oOo-

    ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்
    அதிக மாவுச்சத்து சாப்பிட்டு சிறுநீரகங்கள் கெட்டு போவதற்கு முன்னர் குறைமாவுநிறைகொழுப்பு உணவை சாப்பிட்டு உங்கள் சிறுநீரகங்களை பாதுகாக்கவும்

    இதற்கு ஆதாரம் உள்ளதா ?
    ஆம் ! உள்ளது ��

    Comparative effects of low-carbohydrate high-protein versus low-fat diets on the kidney by Friedman AN, Ogden LG, Foster GD, Klein S, Stein R, Miller B, Hill JO, Brill C, Bailer B, Rosenbaum DR, Wyatt HRin Clin J Am Soc Nephrol. 2012 Jul;7(7):1103-11. doi: 10.2215/CJN.11741111. Epub 2012 May 31. who conclude that In healthy obese individuals, a low-carbohydrate high-protein weight-loss diet over 2 years was not associated with noticeably harmful effects on GFR, albuminuria, or fluid and electrolyte balance compared with a low-fat diet.

    ReplyDelete