Thursday, October 20, 2016

அதிக பாதாம் ஆபத்து ??

பாதாம் ஒரு ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகிவற்றை கொண்ட மிகவும் அருமையான கொட்டை வகை . ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல 100 பாதாம் பருப்புகளை ஒன்றாக சாப்பிடுவது என்பது ,அதில் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளை அதிகரித்து விடுகிறது. நாம் நீண்ட நாட்களாக அதிகமான பாதாம் உட்கொள்ளும்போது, அது உடலில் செலினும்( selinum) அளவை வெகுவாக அதிகரிக்கிறது.இது செலெனோசிஸ்( selenosis) எனும் நோய்க்கு வழிவகுக்கிறது. இதனால் அதிக முடி உதிர்வு, ஜீரண உறுப்புகளில் பாதிப்பு போன்ற விளைவுகளை உண்டாகும்..மேலும் தொடர்ச்சியாக இவ்வளவு அதிகமான புரோட்டீன் கொண்ட பாதாமை தினசரி 100 என உண்டு வந்தால், இரண்டு மூன்று ஆண்டுகளில் நிச்சயமாக அது நம் கிட்னியை பாதிக்கும்( இது பற்றி மேலும் அறிய (பேலியோவும் கிட்னி சட்னியும் என்ற கட்டுரையை படிக்கவும் ).நமக்கு இணையத்தில் இலவசமாக எண்ணற்ற தகவல்கள் கொட்டி கிடக்கின்றன.எனவே எந்த உணவு முறைகளையும் பின்பற்றினாலும், அதற்குமுன் , அது பற்றி சிறிதேனும் ஆராய்ச்சி செய்து பின் முடிவு செய்யவும்.. தினசரி 15-20 பாதம் பருப்புகள் உண்பது ஏற்கத்தக்கது...

No comments:

Post a Comment