Friday, October 28, 2016

பேலியோ டயட் புத்தகம் திறனாய்வு அத்தியாயம் 2


மனித இனத்தின் பரிணாம அடிப்படையையும் அவர்கள் உணவுமுறையும் விவரிப்பதில் தொடங்குகிறது இந்த அத்தியாயம்.32 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் லூஸி எலும்புக்கூடும் அதற்கு  அருகில் கிடைத்த விலங்குகளின் எலும்புகளும்  மற்றும் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிடைத்த ஹோமோ மனிதர்களின் தடயங்களும் அன்றைய மனித உணவில் இறைச்சி இருந்ததை உறுதி செய்ததாக ஆசிரியர் விளக்குகிறார். மேலும் எப்படி சமைத்த  இறைச்சி மனிதனின் பரிணாம வளர்ச்சியில் எப்படி முக்கிய பங்காற்றியது என்பதையும் சிறப்பாக விளக்கி , பரிணாம வளர்ச்சியில் நமது மூளை வளர்ச்சியை பல மடங்கு அதிகமாக்கி நம்மை விலங்குகளிடமிருந்து மனிதனாக மாற்ற உதவிய இறைச்சி உணவு எப்படி நமக்கு தீங்கு செய்ய முடியும் என்று கேட்கிறார் .

இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் குறிப்பிட்டதுபோல், சமைத்த இறைச்சி உணவு மனித மூளையின் அபரிதமான வளர்ச்சிக்கு காரணம் அல்ல.இது முற்றிலும் தவறான கருத்தாகும். சமைத்த இறைச்சியானது உடலுக்கு தேவையான ப்ரோடீன்,கொழுப்பு,எனர்ஜி போன்றவற்றை மட்டுமே தர  முடியுமே தவிர மூளை வளர்ச்சிக்கு சமைத்த இறைச்சி எந்த விதத்திலும் காரணமாக இருக்கவே  முடியாது என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதிகமான குளுகோஸ் தேவை உள்ள உறுப்பான  மூளை எப்படி இந்த குறைந்த கார்ப் உணவுகளின் மூலம் மிக பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என்பதுதான் இங்கு கேள்வி. என்னதான் உடல் கொழுப்பை எரிக்கும் கீட்டோன்ஸ் (ketones mode) முறையில் இயங்கினாலும் குறைந்தபட்சம் 30 கிராம் குளூகோஸ் அளவு கட்டாயம் மூளைக்கு தேவை.

மனிதனின் இந்த மிக பெரிய மூளை வளர காரணம் ஸ்டார்ச் என்பதும் மாவு சத்து பொருள்களே என்பது நவீன ஆராச்சியாளர்கள் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. இதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது அமிலஸ் (amylase) எனப்படும் நமது உமிழ்நீரில் காணப்படும் ஒரு என்சைம் (enzyme),இந்த அமிலஸ் நாம்  உண்ணும் மாவு சத்துள்ள உணவுகளை செரிமானத்தை எளிதாக்கும் பொருட்டு சிறிய சிறிய துகள்களாக உடைக்கும் வேலையை செய்வது, இது சமைத்த மாவுச்சத்துள்ள உணவுகளுக்கு மட்டுமே மிக சிறப்பாக வேலை செய்யும்.அமிலஸ் ஜீன் (amylase gene) நமது மூதாதையர்களாக கருதப்படும்
சிம்பான்சியின்(Chimpanzees) DNA வில் இரண்டு மட்டுமே காணப்படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு அதிகபட்சமாக இது 18 வரை நமது DNA வில்  உள்ளது...இதன் பொருள், ஸ்டார்ச் எனப்படும் மாவுசத்து உள்ள உணவு பொருளை  மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உண்ண தொடங்கி விட்டான்,அதன் தொடர்ச்சியாகவே பரிணாம வளர்ச்சியில் நமக்கு அமிலஸ் (amylase) மூலக்கூறுகள் மாவுசத்து உணவுகளை செரிக்கும் பொருட்டு  நமது DNA வில் அதிகரித்துள்ளன.மேலும் பேலியோதிக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அனைவருக்குமே அமிலஸ் என்சைம் DNA மூலக்கூறுகள் எண்ணிக்கை 10க்கும் மேல்(ஏனென்றால் நூலாசிரியர் சொல்வது போல் கடந்த 10000 வருடங்களில் மரபணு மாற்றம் 0.01% அளவே,எனவே  தற்போதைய மனிதனின்  DNA க்கும் , பேலியோ மனிதனின் DNA க்கும் பெரிய மாற்றமில்லை).இதனால் பேலியோ காலத்திற்கு வெகு காலம் முன்பே மனிதன் ஸ்டார்ச் நிரம்பிய கிழங்கு வகைகள்,தானியங்கள் போன்றவற்றை உண்ண  துவங்கிவிட்டான், இதனாலேயே அமிலஸ் என்சைம் DNA மூலக்கூறுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இப்போது பேலியோ டயட் என அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுவது நிச்சயமாக கற்கால மனிதனின் உணவு முறை இல்லை.

இதை பற்றி ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.நேரமிருந்தால் இதை படித்து மேல்சொன்ன  கருத்துக்களை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

http://sydney.edu.au/news-opinion/news/2015/08/10/starchy-carbs--not-a-paleo-diet--advanced-the-human-race.html
http://www.nytimes.com/2015/08/13/science/for-evolving-brains-a-paleo-diet-full-of-carbs.html?_r=0
http://www.telegraph.co.uk/foodanddrink/foodanddrinknews/11798169/Did-cavemen-eat-carbs-Why-the-paleo-diet-could-be-wrong.html

இதிலிருந்து தெரியவருவது பேலியோ மனிதரும் அதற்கு முந்தையவருக்கும் மாவு சத்துள்ள உணவுகள் புதிதல்ல.

1800 களில் பிரபலமாயிருந்த பாண்டிங் டயட் எனும் உடல் எடை குறைக்கும்  டயட் பற்றி நன்றாக விளக்குகிறார், குறைந்த கார்ப் ,அதிக கொழுப்பு உணவு என்பது எடை குறைப்பில் பல ஆண்டுகாலமாக எடை குறைப்பு மருத்துவத்தில் இருந்து வருவது தான்.ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள் உடல் எடை கூட்ட /குறைக்க இந்த உணவு முறையையே பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்கள்,இப்போது பாலிவுட் இல்  கூட இதையே பின்பற்றுகிறார்கள்.1800 களில் கிடைத்த அசைவ உணவுகளின் தரத்திற்கும் ,இப்போதுள்ள தரத்திற்கும் வித்தியாசம் மிக அதிகம்.இந்த டயட் முறை அக்கால மக்களுக்கு நன்மை செய்திருப்பதாகவே ஏற்றுக்கொண்டாலும் , தற்போதுள்ள நடைமுறைக்கு சிறிது கூட ஒத்துவராது என்பதே உண்மை. மிகவும் வசதி உள்ளவர்கள் வேண்டுமானால் ,இந்த டயட் முறையை தரமான அசைவ உணவுகளுடன் பின்பற்ற இயலும்.சாதாரண மக்களுக்கு கொஞ்சமும் பயன் தராது.


ஆன்சல் கீஸ் பற்றி நூலாசிரியர் மிக விளக்கமாக எழுதியுள்ளார். ஆன்சலின் "ஏழு நாடுகளின் ஆராய்ச்சி" ஆய்வு உலக உணவு முறையில் மிக பெரிய மாற்றத்தை ஏட்படுத்தியது உண்மை. ஆனால் இந்தியாவில் இந்த ஆய்வின் தாக்கம் ஒன்றுமே இல்லை,ஏனென்றால் பொதுவாகவே நமது உணவில் மிக அதிக கொழுப்பு உணவுகள் இல்லை.தினம் ஒரு முட்டை,இறைச்சி போன்ற உணவு பழக்கமே நமக்கு கிடையாது. வாரம் ஒரு முறை  அசைவம் என்பதே,பல ஆண்டு காலமாக நமது வழக்கில் உள்ளது.ஒரே மாற்றம் கடலை ,தேங்காய் எண்ணெய்களின் இடத்தை சன் பிலோவேர் எண்ணெய்  பிடித்தது தான். உலகமயமாக்கலுக்கு பிறகே அமெரிக்க உணவு முறைகளான கார்ன் பிலேக்ஸ் , பர்கர் ,பிஸ்சா  போன்றவை உள்நுழைந்தன..20 ஆண்டுகளுக்கு முன் வரை, நமது பாரம்பரிய உணவு முறைகளில் மிகப்பெரிய மாற்றமென்று ஒன்று கிடையாது.பர்கர் ,பிஸ்சா  போன்றவை சில மேல்தட்டு மக்களுக்கு வேண்டுமானால் பல ஆண்டுகளுக்கு முன்பே பரிச்சியமாக இருக்கலாம்,ஆனால்  இவை பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு கடந்த 10  வருடங்களாகவே தெரியும்.

எனவே ஆசிரியர் கூறுவது போல் இந்த ஏழு நாடுகளின்ஆ ராய்ச்சியின் விளைவாக, உணவு முறைகள் மாறி,நமக்கு நீரிழிவு,பிரஷர்,கான்செர் போன்ற நோய்கள் வந்திருப்பதாக குறை கூறுவது சற்றும் ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.

1 comment:

  1. கொஞ்சம் உண்மை இருப்பது போல இருக்கு ஆனால் இல்லை
    அன்புடன்
    பாலு

    ReplyDelete