Friday, October 28, 2016

கோழிக்கு ஆன்ட்டி பயாடிக் போட்டால் உனக்கு என்ன?

கோழிக்கு ஆன்ட்டி பயாடிக் போட்டால் உனக்கு என்ன? அது கோழிக்கு தானே ஆபத்து, அதை சாப்பிடும் நமக்கு என்ன? என்பது ஒரு நண்பரது வாதம்.சரி ஒரு உங்களிடம் ஒரு கேள்வி? நீங்கள் இரண்டு மாடு வைத்திருக்கிறீர்கள்.ஒன்றை தினமும் புல்,தழை,இலை என உணவிடுங்கள், மற்றொன்றை ஒரு நகரத்திற்குள் துரத்திவிட்டு தினசரி உணவாக சுற்றில் ஒட்டி இருக்கும் போஸ்டரையும் ,பிளாஸ்டிக் காகிதங்களையும் உணவாக உண்ண  வைக்கிறீர்கள். இரண்டு மாடுகளும் தினசரி தலா 2 லிட்டர் பால் கொடுக்கிறது.இந்த இரண்டு மாடுகள் கொடுக்கும் பாலில் எதை நீங்கள் அருந்துவீர்கள்.இரண்டு வகை பாலுக்கும், அதில் இருக்கும் சத்துக்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா ?

அதே போல் இரண்டு ஆடு வைத்திருக்கிறீர்கள்.ஒன்றை தினமும் புல்,தழை,இலை என உணவிடுங்கள், மற்றொன்றை ஒரு நகரத்திற்குள் துரத்திவிட்டு தினசரி உணவாக சுற்றில் ஒட்டி இருக்கும் போஸ்டரையும் ,பிளாஸ்டிக் காகிதங்களையும் உணவாக உண்ண வைக்கிறீர்கள். இந்த இரண்டு ஆடுகளின் இறைச்சியும் ஒரே தரம் உள்ளதா. புல் தின்னும் ஆட்டின் கறியை தொடர்ச்சியாக உண்பவருக்கும், போஸ்டரை உண்ணும் ஆட்டின் கறியை தொடர்ச்சியாக உண்பவருக்கும் ஒரே மாதிரியான சத்துக்கள் கிடைக்குமா? அதேபோல் ஆட்டிற்கு தொடச்சியாக அரைக்கப்பட்ட தானிய உணவுகளை கொடுத்தாலும் ,இறைச்சியின் தன்மை மாறுபடுமா இல்லையா?

நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் தசை ,எலும்புகள்  போன்றவற்றின் வலு,தன்மை போன்றவை நாம் உண்ணும் உணவுகளின் தன்மையையும், உணவுகள் கொண்டுள்ள சத்துகளின் தன்மையையும் ஒத்தே இருக்கும். இது அனைத்து வகை உயிரினங்களுக்கும் பொருந்தும், ஏன் தாவர  வகைகளுக்கும் கூட இது பொருந்தும்.உதாரணமாக கடல் ஓரங்களில் வளர்ந்த தென்னையில் காய்க்கும் இளநீரில் உப்புதன்மை ,மற்ற பகுதிகளில்  விளையும் இளநீரை விட சற்று அதிகமாக  இருக்கும்,அந்த தேங்காயின் சுவையும் சற்று உப்பு சுவையுடனே இருக்கும். காரணம் தென்னைக்கு உப்பு அதிகமாக உள்ள கடல் நீர் பாய்வது தான் .இதே போல்தான் நிலக்கடலை அறுவடை செய்யும் காலங்களில் , அந்த பகுதிகளில் கிடைக்கும் எலி முயல் போன்றவற்றின் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும் என சொல்லுவார்கள்,ஏனென்றால் இவை அதிக நிலக்கடலை உண்ணுவதா. அதேபோல் அதிக மக்காசோளம்  கொடுத்து வளர்க்கப்படும் மாட்டின் கொழுப்பு வெண்மை நிறத்திலும், புல் மேயும் மாட்டின் கொழுப்பு மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இறைச்சியின் சத்துக்களும் அதே போல் வேறுபடும்.உண்ணும் உணவின் தன்மை நமது உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் பிரதிபலிக்கும். இவ்வாறே நாம் ஆன்ட்டி பயாடிக் மருந்து அதிகம் கொடுக்கப்பட்ட கோழிகளை உண்ணும்போது, அது கோழியின் கல்லிரல் ,கிட்னி போன்ற பகுதிகள் மட்டுமின்றி அதன் உடலின் ஒவ்வொரு பகுதியும் ஆன்ட்டி பயாடிக்களை மிக சிறிதளவேனும்  கொண்டிருக்கும்.ஒரு கிலோ பண்ணைக்கோழி  இறைச்சியில் 3 முதல்150  மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் இருப்பதாக  சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.எனவே பண்ணைக்கோழிகளை தொடர்ச்சியாக உண்ணும்போது ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் தாக்கம் கட்டாயமாக இருக்கும். எனவே அதிகம் இந்த பண்ணைகோழி இறைச்சி தொடர்ச்சியாக உண்ணுவதை தவிர்ப்போம் .

1 comment:

  1. பேவியோ பத்தி அள்ளி உடுவன்னு நம்பி பாத்தா ஒரே கோழி புராணமா எடுத்து உடுற நல்ல கோழி இருக்கு ஆடு இருக்கு மாடு பன்றிஇன்னு வக வகயா இருக்க கனியிருக்க காய் கவர்ந்தற்றுன்னு ப்ராய்லர் பாட்டா படர

    ReplyDelete