Sunday, October 30, 2016

அதிக புரதமும், அடர்த்தி குறையும் எலும்புகளும்(Osteoporosis).

   பொதுவாக  புரதங்கள் (protein) அமில தன்மை வாய்ந்தவை(acidic), நமது உடல் இயற்கையாக காரதன்மை கொண்டது(alkaline). நமது உடலின் அமில மற்றும் கார தன்மை என்றும் சமநிலையில்  இருக்க வேண்டும். அமில கார சம நிலை pH என்ற குறியீடு மூலமாக அளவிட படுகிறது  (1-14).  pH அளவீடு 7 என்பது சரியான அளவில் அமில கார அளவு உள்ளது என காட்டுகிறது. இதன் அளவீடு 7க்கு குறையும்போது  உடல் அதில் அமில தன்மை கொண்டிருக்கும் , அதேபோல் 7க்கு அதிகமாக இருக்கும்போது  உடலில்  கார தன்மை மிகுந்து இருக்கும்.
நாம் தினசரி நமது உணவில் அதிக அமில தன்மை கொண்ட உணவு பொருளைகளை சேர்க்கும் போது  உடலில் அமில தன்மை அதிகரிக்கிறது , உடல் அதை சமநிலை படுத்தி pH அளவீடை குறைக்க உடல் ஒரு வித திரவத்தை சுரந்து அமிலத்தை சம நிலை படுத்தும், இந்த அமில சமநிலை படுத்தும் திரவம் பெரும்பான்மையாக கால்சியம் மூல  பொருள்களையே அதிகமாக கொண்டிருக்கும் .இந்த கால்சியம் உடலுக்கு  எங்கிருந்து கிடைக்கிறது என்றால், நமது உடலில் உள்ள எலும்புகளில் இருந்தே இது பெறபடுகிறது.

அதாவது நாம் அமில தன்மை அதிகமாக  கொண்ட பேலியோ டயட்டில் பரிந்துரைக்கப்படும் விலங்கு புரதங்களை தினசரி உணவாக உட்கொள்ளும்போது, அது மிக அதிமான அமிலத்தை கொண்டிருக்கும் , அதனை சமநிலை படுத்த உடல் தொடர்ச்சியாக நமது எலும்புகளில் இருந்து கால்சியம் உறிஞ்சி  எடுக்கிறது.இதனால் நமது எலும்புகள் அடர்த்தி குறைந்து எளிதில் உடைத்து விடும் நிலைக்கு ஆளாகிறது அதவாது Osteoporosis நோய் . அதிக புரதங்களை எடுக்கும்போது கால்சியம் மாத்திரைகளை எடுத்து கொள்வது  என்பது மிக அவசியம் அப்போது தான் எலும்புகளில் இருந்து கால்சியம் பெறப்படுவது தடுக்கப்படும். ஆனால் தொடர்ச்சியாக கால்சியம் மாத்திரை எடுப்பதும் உடலுக்கு மிக நல்லதல்ல,  நமது உடலுக்கு தினசரி தேவையான 50 கிராம்  புரதம்  என்பது மிகவும் போதுமானது , இது அளவுக்கு மிகும்போது கிட்னி, எலும்பு பலமிழத்தல் போன்ற கண்ணுக்கு  தெரியாத பல உடல் உபாதைகள் நீண்ட நாளடைவில்ஏ ற்படும்.எனவே பேலியோ டயட் போன்ற  குறுகிய காலத்திற்கு சிற்றின்பத்தை தரும் உணவு முறைகளை பின்பற்றாமல், அனைத்து சத்துக்களும் சம நிலையில் இருக்குமாறு , உங்கள் உணவு முறைகளை அமைத்து கொள்ளுங்கள். அதிக புரதங்களை எடுத்து கொண்ட , விளையாட்டு வீரர்கள், பளு தூக்கும் வீரர்கள் போன்றவறின்  கடைசி காலங்கள் மற்றும் இறப்பு விகிதங்கள் பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்பே என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .


கீழே கொடுக்க பட்டுள்ளது கிளாசிபைடு டீஸ்யு இன்டர்நேஷனல் (Calcified Tissue International)  லில் பதிவிட பட்ட எலும்பு முறிவுக்கு அதிக விலங்கு புரதங்களுக்கும் உள்ள மிக நெருக்கமான தொடர்பை விளக்கும் வரைபடம். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இடுப்பெலும்பு இந்த விலங்கு புரதங்களால் மிகவும் பலவீனபடும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன

 
   https://www.ncbi.nlm.nih.gov/pubmed/1739864



1 comment:

  1. நீ கூவ ஆரம்பிச்ச பிறகுதான் பேலியோ நல்லா வளந்துகிட்டு வருது என்ன செய்லாம் இந்த நியான்டர
    அன்புடன்
    பாலு

    ReplyDelete