Sunday, October 30, 2016

ஆத்தா நான் டாக்டர் ஆகிட்டேன்.


பேலியோ என்பது மேலை நாடுகளில் பல வருடங்களாக பின்பற்றப்படும் ஒரு எடை குறைப்பு டயட் அதுவும் , மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே பின்பற்ற அறிவுறுத்த படும் ஒரு டயட் . இதை கொண்டு நீரிழுவுக்கு நிரந்தர தீர்வு ,பிரஷர்க்கு நிரந்தர தீர்வு  , வழுக்கையில் முடி வளர வைப்பது , போன்ற  மாய ஜால கவர்ச்சி செய்திகளை  ஒரு பேலியோ குழுமத்தில் விளம்பரபடுத்த பட்டுகொண்டுள்ளது.இவை குறுகிய காலத்திற்கு சற்று நற்பலன்களை தந்தாலும் , நீண்ட காலத்திற்கு பின்பற்றினால் கிட்னி செயலிழப்பு,கான்செர் போன்ற கடும் விளைவுகளை  உண்டாக்கும் என பல ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் மருத்துவ நூல்களின் மேற்குறிப்பின் மூலம் முடிந்தவரை இந்த வலை பூவில் விளக்கி  வருகிறோம்.

ஒரு முகநூல் குழுவில்  பத்தாம் வகுப்பு படித்த ஒரு குழு நபர், நீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தில் இருக்கும் ஒரு நோயாளிக்கு உணவு முறைகளை பரிந்துரை செய்கிறார். ஒருவர் தன்  சொட்டை தலையில் பேலியோவால் முடி முளைத்ததை படத்துடன் விளக்குகிறார்.குழுவில் உள்ள ஓரிரு மருத்துவர்கள் ரூபாய் 1000 பெற்று கொண்டு தனியாக டயட் சொல்கிறேன் பேர்வழி என மக்களை தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வாடிக்கையாளர்களாக மாற்றி வருகிறார்கள். இந்த குழுவில் இருந்து  பிரிந்து சென்ற பலர், அங்கங்கு பேலியோ கிளைகள் துவங்கி ,தங்களால் முடிந்த சேவைகளை  மக்களுக்கு அளித்து வருகிறார்கள்( மக்கள் மேல் தான் எவ்வளவு அக்கறை இவர்களுக்கு). அந்த தனி கிளை பேலியோ குழுக்களை ஒழிக்கும் பொருட்டு,  முக்கிய  பேலியோ  குழு அட்மின்கள் அந்த குழு மட்டுமே பேலியோ டயட் வழங்க வேண்டும் வேறு யாரும்  பேலியோ டயட் வழங்கினால் நம்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டு கொள்கிறார்.  ஏன் இவர்கள் மட்டும் தான் மக்கள்  சேவை ஆற்ற வேண்டுமா? அந்த தனிகிளை குழுக்கழும் சேவை செய்யட்டுமே அதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? நோயற்ற சமூகத்தை உருவாக்க அவர்களும் தான் பாடுபடட்டுமே?  பேலியோவே ஒரு டுபாகூர் டயட் , அதில் இவர்களுக்குள் நான் தான் டயட் சொல்வேன் , நீ சொல்லக்கூடாது என இவர்களுக்குள் சண்டை வேறு.இவர்கள் சண்டையில் பலியாவது அறிவில்லாத இந்த மக்கள் தான். எந்த தகவல் யார் சொன்னாலும், கூகுலில் 5 நிமிடம் தேடினால் , அதன் உண்மை நிலை அறிந்து கொள்ளலாம். அது கூட செய்யாத இவர்கள் சோம்பேறிதனமே , திருமண மண்டபங்களில் 10 வது படித்தவர்களிடம் டயட் கேட்க நாள் முழுதும் வரிசையில் நிற்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது.

பேலியோ டாக்டர் ஆவது எப்படி ?

முதலில் நோயாளிக்கு எனன ஆனாலும் உங்களுக்கும் நீங்கள் பரிந்துரைக்கும் இந்த  டயட்க்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு பேப்பரில் எழுதி  கையெழுத்து வாங்கி கொள்ளுங்கள்.

டயட் சொல்வது மிகவும் எளிது

நோயாளியை ரத்த பரிசோதனை எடுக்க சொல்லுங்கள்   ( Thyrocare only )
ரத்த பரிசோதனைகளை முடிவுகளை ஒன்றும் பார்க்கவேண்டாம், பின்வரும் டயடை, யார் எந்த நோய் என்று வந்தாலும் கண்ணை முடி கொண்டு பின் பற்ற சொல்லவும்.

5 முட்டை காலை உணவு
100 பாதாம் மத்திய உணவு
வேண்டும் அளவு சிக்கன்,மட்டன்,மீன்,பீப்  என எது வேண்டுமானாலும் இரவு உணவு
கெபிர்,காய் காய்கறிகள் இடையிடையில் உண்ணவும்

அவ்வளவு தான் .நீங்கள் இப்போது பேலியோ டாக்டர். யாரவது அதிக விலங்கு ப்ரோடீன் எடுத்தால் , யூரிக் ஆசிட் அதிகமாகும் ,கிட்னி செயலிழப்பு என முட்டாள் தனமாக கேள்வி கேட்டால்,அவர்களை unfriend செய்து விடவும். யாராவது ஏமாளியாக இருந்தால் 10000 வருடங்களுக்கு முன்பே நமது மரபணுவில் யூரிக் ஆசிட் அதிகமானால் கிட்னி தன்னை தானே சரி செய்து கொள்ளும் தன்மையை பெற்று விட்டது என கூறி  சில புரியாத ஆங்கில கட்டுரை லிங்க்களை  விடவும், நோயாளி ஒன்றும் பேச மாட்டார்.  

"ஐயா  நான் 30 நாட்களாக பேலியோ பின்பற்றுகிறேன் , இடது புறம் நெஞ்சு சற்று வலிப்பது போல் உள்ளது" என யாராவது வந்தால்,
உடனடியாக " இதற்கும் எனக்கும் சம்மதமில்லை" எனக்கூறி unfriend  செய்து விட்டு எஸ்கேப் ஆகவும்.

 இன்னும் உங்கள் சேவையை விரிவாக்க  விரும்பினால், குறைந்த விலையில் முட்டை,பாதாம்,மட்டன் ,சிக்கன்  போன்றவை  எங்கு கிடைக்கும் என விசாரித்து அந்த வியாபாரிகளின்  தகவலை நோயாளியிடம் பகிர்ந்து கொள்ளவும், அதற்கு பதிலாக உங்கள் சிற்றுண்டி , பயண போக்குவரத்துக்கு போன்றவைக்காக அந்த வியாபாரிடம் சிறிதளவு பணத்தை சேவையாக பெற்றுக்கொள்ளவும்(சிற்றுண்டி , பயண போக்குவரத்துக்கு போன்றவைக்காக மட்டும்). அவளவு தான் இப்பொது நீங்கள் ஒரு சமூக சேவகர் மற்றும் ஒரு மருத்துவர்.

இந்த காலத்தில் படித்து மருத்துவர் ஆவது மிகவும் கடினம். இப்படி எளிதான வழியில் மருத்துவர் ஆவது என்பது அனைவர்க்கும் அமையாது. எனவே அனைவரும் நோயற்ற சமுதாயத்தை உண்டாக்க இப்போதே மருத்துவர்களாக அவதாரம் எடுப்போம் ,இதை படிக்கும் நீங்களும் 100 ரூபாய் வாங்கி கொண்டு , யாருக்கேனும் பேலியோ டயட் சொல்லுங்கள்.இது எல்லாம்  ஒரு சேவை தானே. முடிந்த வரை நோயற்ற சமூகத்தை உண்டாக்க போராடுவோம், இதையே நம் லட்சியம் என கொண்டு வாழ்வோம்.

2 comments:

  1. இந்த blog இல் எழுதும் இந்த முகமறியா நபர் பேலியோ உணவு முறையைப் பற்றி முழுதாக தெரிந்தவர் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.....

    மருத்துவராகிய நான் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான LCHF, keto போன்ற உணவு முறைகளை ஆராய்ந்தவன். செல்வன் பரிந்துரைக்கும் உணவு முறையில் குறைந்த பட்சம் 50 கிராம் மாவுச் சத்து(carbohydrate) எடுக்கச் சொல்லுகிறார்கள்.... தினமும் காய்கறிகள் , கீரை எடுக்கச் சொல்கிறார்கள்.....தேவையெனில் பழங்களும் உண்ணச் சொல்கிறார்கள். இது modified paleo உணவு முறை ஆகும். இந்த blog எழுதும் நபர் அடிப்படை body metabolism பற்றி எதுவும் தெரியாதவர்....அதற்க்காக நேரம் செலவழித்து எதையும் படிக்காதவர்...இந்த குப்பை blog ஐ படித்து யாரும் நம்பி ஏமாற வேண்டாம். இந்த நபர் எந்த சமூக அக்கறையும், பொறுப்பும் இல்லாதவர்.....இதைப் புரிந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  2. குழுவிலேந்து எடுத்துட்ட ககடுபுல கத்துறாறு விடுங்க பாஸ்
    அன்புடன்
    பாலு

    ReplyDelete