Thursday, October 20, 2016

நிலக்கடலை உண்பது தவறா ? அது கான்சர் வரவழைக்குமா ???

இப்படி தான் போலியான செய்திகள் பேலியோ குழுக்களில் பரப்பப்படுகிறது. இதில் அபிளாடோக்ஸின் (Aflatoxins) எனப்படும் நச்சுப்பொருள் மிக அதிகமாக உள்ளது ,இதை உண்டால் கான்செர் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று, இதனால் தைராய்டு சுரப்பிகள் அதிகமாக பாதிப்படையும் எனவும் கூறப்பட்டு வருகிறது... அபிளாடோக்ஸின் (Aflatoxins) என்பது சாதாரணமாக அனைத்து வகை கொட்டை மற்றும் தனிய வகைகளில் காணப்படுவது.இது லட்சத்தில் ஒருவருக்கு தடிப்புகள் போன்ற ஒவ்வாமை நோய்களை ஏற்படுத்தலாம்.இதனால் கான்செர் வரலாம் என்பது ஒரு அனுமானமே . இதுவரை ஒருவர் கூட அபிளாடோக்ஸினால் கான்செர் நோயினால் பாதிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என அமெரிக்க உணவு மற்றும் மருந்து மேலாண்மை துறை( FDA) அறிவித்துள்ளது..நீங்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள், போன நூற்றாண்டில் நிலக்கடலை & நிலக்கடலை எண்ணெய் அதிகம் சேர்த்து ,எத்தனை மக்கள் தைராய்டு நோயினாலும் & கேன்சராலும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்..
மாறாக தினமும் நிலக்கடலை ஒரு கைப்பிடி அளவு உண்டு வந்தால், கான்செர் ,மாரடைப்பு,நீரிழிவு போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன...இன்னும் நீங்கள் அபிளாடோக்ஸின் (Aflatoxins) என்பது ஒரு கான்செர் வரவழைக்கும் ஒரு பொருள் என எண்ணினால் , நீங்கள் பாதாம் சாப்பிடுவது கூட மிக தவறு தான். ஏனென்றால் ஒரு சில பகுதிகளில் விளையும் பாதாமில் அபிளாடோக்ஸின் அளவு மிக அதிகமாக உள்ளது, ஒரு சில நாடுகள் பாதாமை இறக்குமதி செய்யும்பொது அபிளாடோக்ஸின் அளவை சரி பார்த்தே, இறக்குமதிக்கு அனுமதிக்கிறது..குறிப்பாக ஐரோப்பிய யூனியன் 2007 முதல் அபிளாடோக்ஸின் அளவு பரிசோதிக்கப்பட்ட பாதாம்களை இறக்குமதி செய்கிறது. Reference (https://en.wikipedia.org/wiki/Almond)..உங்களுக்கு தெரியும் , தரம் குறைந்த பொருட்கள் எந்த நாட்டின் சந்தையில் புரளுமென்று.. அதனால் வெளிநாடுகளில் ஒருவர் உண்ணும் உணவு பொருளின் தரமும், நம் நாட்டில் கிடைக்கும் உணவு பொருளின் தரமும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. அதனால் வெளி நாட்டில் வசிக்கும் ஒருவர் பரிந்துரைக்கும் உணவுமுறைகள் அவருக்கு தற்காலிகமாக சரியான பலனை தந்து இருக்கலாம். ஆனால் நம் அனைவருக்கும் பொருந்தாது.
பாவம் நிலக்கடலையின் ஒரு கிலோ சந்தை மதிப்பு 100 ரூபாய் , அதே பாதாம் ஒரு கிலோ சந்தை மதிப்பு 700 ரூபாய். பேலியோ டயட்டில் பாதாம் தினசரி 100 கிராம் சாப்பிடுமாறு அறிவுத்தப்படுகிறார் ,அவர்கள் மாதம் சுமார் 2000 ரூபாய்க்கு பாதாம் மட்டும் வாங்க வேண்டும்.. வருடம் 25 ஆயிரம் ரூபாய் பெரும் பொருளாதார சுமை ,.அதுவும் தினசரி 100 பாதாம்கள் எடுப்பது , நிச்சயமாக இரண்டு வருடங்களில் உங்கள் கிட்னியை பாதிக்கும்.உலகின் மிக சிறந்த ஆரோக்கியமான உணவுப்பொருள்களில் ஒன்றான , குறைந்த விலை கொண்ட நிலக்கடலையை நாம் ஒதுக்கி நிலக்கடலையை விட குறைந்த சத்துக்கள் கொண்ட அதிக விலை கொண்ட பாதாமை நம் நாடி செல்வது கனி இருக்க காய் கவரும் செயலாகும்.
சிந்திப்பீர்,நல்லதை நாடி உண்பீர் ,நலமுடன் வாழ்வீர்..

No comments:

Post a Comment