Thursday, October 27, 2016

சிரிப்பு நேரம். relax please


கேட்டதில் ரசித்தது.

"அழகியே தீயே" என்று ஒரு திரைப்படம் பிரகாஷ்ராஜ் மற்றும் பிரசன்னா ,நவ்யாநாயர் ,பாஸ்கர் போன்றவர்கள் நடித்திருப்பார்கள். அதில் பிரசன்னாவும் அவர்களுடைய நண்பர்களும் சேர்ந்து அவர்களின் வீட்டு ஓனர் பாஸ்கரை , அவர் போலீஸ் போல் இருப்பதாகவும், அவரை போலீஸ் வேடத்தில் நடிக்க வைப்பதாகவும் சொல்லி, போலீஸ் உடை அணிந்து அந்த வேடத்திற்கு பயிற்சி பெறுமாறு சொல்லுவார்கள்.அதேபோல் அவரும் மனதளவில் தன்னை ஒரு போலீஸ்காரராகவே நினைத்து கொண்டு மிடுக்குடன் படம் முழுவதும் வந்து போவார்.


இங்கு ஒரு பேலியோ குழுமத்தில்  நண்பர்கள் சிலர் விளையாட்டை போலீஸ் என சொன்னதை சீரியசாக எடுத்துக்கொண்டு மனதளவில் தன்னை ஒரு போலீஸ்காரராகவே நினைத்துக்கொண்டு மிகுந்த மிடுக்குடன் ஒரு நபர் அந்த குழுவில் வலம்  வந்து கொண்டு இருக்கிறாராம், வர வர உடை கூட போலீஸ்,மிலிட்டரி  சாயலிலே அணிந்து வருகிறாராம். அவருக்கு முன்னால் போலீஸ் போலீஸ் என புகழும் குழு நண்பர்கள் , முதுகுக்கு பின்னால் சிரித்து சிரித்து வயிறுவலியால் துடிக்கிறார்களாம்.இதை எல்லாம் அறியாத நமது அப்பாவி போலீஸ், குழுவில் டயட் கேட்கும் அப்பாவி மக்களை  எப்போதும் போல் அதட்டியபடி மிடுக்குடன் திரிகிறாராம். இந்த நிலை முற்றினால், பேலியோவால் குணப்படுத்தமுடியுமா என சில நண்பர்கள் அவர்களுக்குள் காமெடி விவாதம் செய்கிறார்களாம்.

1 comment:

  1. அருண் இதெல்லாம் ஒரு கதையா பேலியோ பத்தி பேசுங்க பாஸ்
    அன்புடன்
    பாலு

    ReplyDelete