Saturday, October 29, 2016

A2 பால் லிட்டர் 120 மட்டுமே

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வரை மிகவும் சாதாரணமாக ஒரு ஏழை குழந்தைக்கு கூட மிக எளிதாய் கிடைத்த A2 நாட்டு மாட்டு பசுக்களின் பால்,இன்று லிட்டர் 80 ரூபாய் மட்டும் , 100 ரூபாய் என உயர்ந்து பொருளாதரத்தில் சற்று உயர்ந்த மக்களுக்கு மட்டுமே கிடைக்கும் சூழ்நிலையில் இன்று  உள்ளது. அபபடியே இவர்கள் இவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் அது உண்மையில் A2 பால் தானா என்பது மிக பெரிய கேள்வி குறி ?

ஏன் A2 ?

ஜெர்சி மற்றும் நாட்டு மாட்டு பாலில் உள்ள அனைத்து சத்துக்களும் ஒன்றே, ஒன்றே ஒன்றை தவிர அது பீட்டா கேசின் (beta casein) எனும் மூலக்கூறு நாட்டுமாட்டின் பாலில் உள்ள  அமினோ அமிலத்தின் (amino acid ) 67வது இடத்தில ப்ரொளின் (proline)  ஆக இருக்கும்  அதே ஜெர்ஸி பசுவில் அமினோ அமிலத்தின் (amino acid ) 67வது இடத்தில ஹிஸ்டிடின்(histidine) ஆக  இருக்கும். இந்த  ஹிஸ்டிடின் தான் type 1 நீரிழிவு நோய்க்கு முக்கிய காரண பொருளாக இருக்கலாம் என்றும் , இது ரத்த குழாய்களில் காயங்களை ஏற்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்பது  சமீபத்திய ஆய்வுகளின் தகவல்கள் .இதுதான் மக்களை  A2 பாலை நோக்கி மக்களை படை எடுக்க வாய்த்த காரணம்.

ஆனால் சந்தையில் கிடைக்கும்  A2  பால் உண்மையான நாட்டு பசுக்களின் பாலா?

நாட்டுப்பசு ஒரு நாள் ஒன்றுக்கு  மிக அதிக பட்சமாக 8 லிட்டர் கொடுக்கும்.அதுவும் கன்று ஈன்ற  மூன்று மாதங்கள் மட்டுமே ,அதன் பிறகு ஒரு லிட்டர் 2 லிட்டர் என்றே பால் கொடுக்கும். ஒரு நாளைக்கு  ஒரு வியாபாரி 100 லிட்டர்  A2 பால் விற்க வேண்டும் என்றால் அவரிடத்தில் 20 பசுமாடுகள் இருந்தால் மட்டுமே முடியும், ஏனென்றால் 20தில் 5 மாடுகள் சினையாய் இருக்கும் , 5 மாடுகள் 2 லிட்டர் மட்டுமே கறக்கும் ,மீதி 10 மாடுகள் மட்டுமே 8 லிட்டர் அளவில் கறக்கும்.உண்மையில் 25 மாடுகளுக்கு தினசரி உணவளித்து 100 லிட்டர் பால் விற்றால், லிட்டர் 250 ரூபாய்க்கு விற்றாலும்  அவர்களுக்கு லாபம் ஒன்றும் கிடைக்காது.   பிறகு எப்படி 100 ரூபாய், 80 ரூபாய்க்கு இந்த  A2 பால் கிடைக்கிறதென்றால் , இதுவும் கலப்படமே  50 லிட்டர்  A1 பாலுக்கு ஒரு லிட்டர்  A2 பால் என கலந்து  A1 பாலையே  A2 என்று விற்கிறார்கள்.  A2 பாலை அதிக உற்பத்தி செய்வது( mass production ) என்பது நடக்க காரியம். விவசாயிகளும் நாட்டு மாட்டு பசு வளர்ப்பில் லாபம் ஒன்றும் பார்க்க முடியாது என்பதால் அவர்கள்  ஜெர்ஸி பசுக்களையே  99% வளர்க்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் வீட்டு தேவைக்கு மட்டும் ஒரு நாட்டுப்பசு வளர்க்கிறார்கள். உண்மையில் உங்கள்  வீட்டில் நாட்டு பசு மாடு வாங்கி வளர்த்து ,அதில் பெற்றால் மட்டுமே  உண்மையான  A2 பால் கிடைக்கும்.அல்லது உங்களுக்கு வீட்டுக்கு அருகில் யாராவது நாட்டு மாடு வைத்து பால் கறந்து விற்றால் அதை வாங்கலாம். இந்த டப்பாக்களில் அடைத்து விற்கும்  A2 பாலை 100 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு , நீங்கள் A1 பாக்கெட் பாலே வாங்கி குடிக்கலாம்.  A2  பால் விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். உண்மை உணர்வோம்
    

3 comments:

  1. Evlo theliva solreengale... appo ean kalapadam panravangala vittutu.... PALEO va mattum straight ah thaakureenga... for no big reason....

    ReplyDelete
  2. நல்ல பால் கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தால் தேடிப் பிடித்து வாங்கலாம். விருப்பம் இல்லைனா விட்டு விடலாம். அவரவர் விருப்பம். கலப்படம் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். 8 லிட்டருக்கு மேல், 300 நாட்களுக்கு மேல் பால் தரும் பசுக்கள் உண்டு. கொடுக்கப்பட்ட கணக்கீடு அனைத்துப் பசுக்களுக்கும் அனைத்து பால் பண்ணையாளர்களுக்கும் பொருந்தாது. ஆயினும் மக்கள் நாட்டு மாட்டு ஏ2 பால் என்று நம்பி அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாந்து போய் விடக் கூடாது என்பதற்காக தாங்கள் எழுதியது நன்றே.

    ReplyDelete
  3. பேலியோவுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமே இல்லியே
    அன்புடன்
    பாலு

    ReplyDelete