Tuesday, November 1, 2016

இது பேலியோ பின்பற்றுபவர்களுக்கு அல்ல

"The China Study" என்றொரு புத்தகம் அமெரிக்காவில் ஒரு பில்லியன் எண்ணிக்கையை தாண்டி விற்ற புத்தகம். எழுதியவர் Dr. T. Colin Campbell Phd மிகவும் புகழ் பெற்ற உணவியல் துறை ஆராய்ச்சியாளர். இவர் சொல்வது அதிக விலங்கு உண்பது , நம் உடலில் உள்ள கான்செர் செல்களை முடுக்கி கான்சர் நோயை தோற்றுவிக்கும் என்பது. இது பற்றி பல புத்தகங்கள் , கட்டுரைகள் , பல சொற்ப்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

நம் தினசரி உணவில்  அசைவ  முட்டைகள் இருக்கும்  போது , தொடர்ச்சியாக நீண்ட நாளடைவில் இது கேன்சரை உறுதியாக விளைவிக்கும் என தன "The China Study" புத்தகத்தில் விரிவாக  இருக்கிறார். தினசரி அசைவ உணவுக்கும், கேன்சருக்கும்  உள்ள தொடர்பை பின் வரும் வரைபடதில் காணலாம்.இது பல நாடுகளில் இதை நிரூபிக்க இவர் செய்த ஆராய்ச்சி .

மேலும் அவரது சில சொற்பொழிவு இணைப்புகள்  
https://www.youtube.com/watch?v=yfsT-qYeqGM
https://www.youtube.com/watch?v=mguepudBoYA
The China Study finds a strong correlation between meat consumption and certain cancers.

வலைபூவில் தேனெடுக்கும் வண்டுகளுக்கு

இந்த தளத்தில் பேலியோ டயட்டின் தீமைகள் & நம் பாரம்பரிய உணவு முறைகள் பற்றி மட்டுமே விவாதிக்கப்படும்.பேலியோ மீது பற்று கொண்டுள்ள  நண்பர்கள் யாரையும் இங்கு கையை பிடித்து நாங்கள் இழுக்க வில்லை, தேவை இல்லாமல் நீங்கள் இங்கு வந்து உங்கள் நேரத்தை விரயமாக்கவேண்டாம். நீங்கள்  மட்டும் ஆங்கில மருத்துவத்தையும், மருத்துவ உலகத்தையும் கண்டபடி விமர்சனம் செய்யலாம். ஆனால் யாரும் பேலியோவுக்கு  எதிராக  வாயை திறக்க கூடாது, நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்.  பேலியோவின் தீமைகளை பற்றி தெரிந்து விரும்பினால் மட்டும், இந்த வலை பூவிற்கு வரலாம். பேலியோவால் ஏற்படும் பாதிப்புகளை எவரேனும் ஒருவருக்கு தடுத்து நிறுத்தினால்கூட அது எங்கள் வெற்றி தான். அது போதும் எங்களுக்கு.

நாங்கள் ராகி களி  உண்ண  சொல்லும் முட்டாள்களாகவே இருந்து விட்டு போகிறோம், உங்களுக்கு கவலை வேண்டாம். மாதம் 2000 ரூபாய்க்கு மருந்து  வாங்கி சாப்பிட வேண்டாம், ஆனால் அந்த பணத்திற்கு 3 கிலோ பாதாம் வாங்கி உண்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்.

கடைசியாக நாங்கள்  சொல்வது ஒன்றே ஒன்று தான். பேலியோ ஒரு எடை குறைப்பு மருத்துவம், அதுவும் மிக குறைந்த காலம்  மட்டுமே பின் பற்றப்படவேண்டிய ஒன்று, இதை தொடர்ச்சியாக நீண்ட நாள் பின்பற்றுவது மிக மிக ஆபத்தானது. மாதம் 3கிலோ பாதாம் , 10 கிலோ இறைச்சி (தினசரி 300கிராம்), 150 முட்டை (தினசரி 5) . வருடம் 35 கிலோ பாதாம், 120 கிலோ  இறைச்சி,1700 முட்டைகள். இதை உடல் தாங்குமா ?இவ்வளவு ப்ரோடீன் உடலுக்கு நல்லதா என்று யோசியுங்கள் ? தற்காலிக தீர்வுகளுக்கு , உயிரை பணயம் வைக்காதீர்கள்.

எங்கள் பயணம் வழக்கம் போல் தொடரும்.

Monday, October 31, 2016

கொதிக்கும் நண்பர்களுக்கு!!


நண்பர்களே வணக்கம்,
                எங்கள் முக நூல் பக்கங்களை முடக்கிய நண்பர்களுக்கு நன்றி. முதலில் இந்த வலை பூ ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கிறோம், அனைத்து மக்கள் போல் எங்களுக்கும் பேலியோவின் மீதி மிக அதிக காதல் முன்னர் இருந்தது, அதை  நாங்கள்  பின்பற்றியதுடன் மட்டுமில்லாமல் எங்கள்  நண்பர்கள் அனைவருக்குமே பரிந்துரைத்து  வந்தோம். நாளடைவில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தபோது , அனைத்திலும் பொதுவாக பட்டது , அசைவ உணவுகள் தொடர்ச்சியாக எடுப்பது மிகவும் ஆபத்து என்று. ஆனால் பேலியோ குழுவில் இது பற்றி விவாதிக்கும் பொருட்டு சில கேள்விகளை எழுப்பினோம்? ஆனால் எங்கள் post கள் குழுவில் பிரசுரிக்க மறுக்கப்பட்டன. பேலியோவின் தீமைகள் பற்றிய  எந்த ஒரு  செய்தியும் பிரசுரிக்க படுவதே இல்லை. மேலும் இது பற்றி வினா எழுப்பியவர்கள் அதிரடியாக குழுவில் இருந்து நீக்க பட்டார்கள்.

குழுவில் நன்மை தீமை இரண்டுமே விவாதிக்க பட வேண்டும், அதற்கு தகுந்தாற்போல் நம் உணவு முறைகளை மாற்றி கொள்ள வேண்டும். எதையும் ஒரு தலை பட்சமாக பார்ப்பது தவறு.  நன்மைகளை பேசும் அதே சமயம் தீமைகளும் விவாதிக்க பட வேண்டும். எங்கள் வலை பூவில் கேள்வி கேட்க தொடங்கிய  பிறகு தான், சிக்கனில் கிட்னி,கல்லிரல் போன்றவை உண்ண  கூடாது, கிட்னி பிரச்னை உள்ளவர்கள் 50-60 கிராம் புரதம் மட்டுமே எடுக்க வேண்டும் என அந்த குழுவில் டயட் முறைகளை மாற்றி உள்ளார்கள். 50-60 கிராம் ப்ரோடீன் உணவு பேலியோ டயட்டில் சாத்தியமா?

மேலும் பேலியோ மனிதர்கள்  தானியங்கள் உண்ணவில்லை இல்லை என்று எப்படி உறுதியாக  சொல்கிறீர்கள்? அமிலேஸ்( Amylase) gene  எணிக்கை எப்படி 10 ஆனது, சிம்பாஞ்சிகளுக்கு 2 மட்டுமே இருந்தது? 30000 ஆண்டுகள் முன் கிடைத்த தானியம் அரைக்கும் கற்கள் பற்றிய கருத்து, அதிக முட்டை உண்டால் வரும் ப்ரோஸ்டேட் (prostate ) கான்செர் பற்றிய கருத்து,அதிக விலங்கு புரதம்,அதிக யூரிக் ஆசிட்,பின் கிட்னி செயலிழப்பு?  போன்றவை உங்கள் குழுவில் பிரசுரிக்க இல்லை.மேலும் நாங்கள்  இந்த கேள்வி கேட்டதால் நாங்கள் நாய்களை போல குழுவில் இருந்து விரட்டி அடிக்க பட்டோம். பேலியோ வை புகழ்பவர்கள் மட்டுமே குழுவில் இருங்க முடிந்தது.


பேலியோ எடை குறைக்க அதிக பட்சம் 3 மாதங்கள் மட்டுமே பின்பற்றக்கூடிய கூடிய நல்ல உணவு முறை. ஆனால் அது நீரிழிவு நோய் ,பிரஷர்  போன்ற நோய்களுக்கு நிரந்தர தீர்வாகாது என்பது எங்கள் வாதம்.இதன் பின் விளைவுகள் ஏராளம்.நாங்கள்  ஏதோ கார்ப்பரேட் கைக்கூலிகள் அல்ல, மிக மிக சாதாரணமா மனிதர்கள் (common men ), நாங்களும் உங்கள் நண்பர்களே , எங்களுக்கு அந்த குழுவில் விவாதிக்க இடம் தரறதே இந்த வலை பூ , தீமைகள் பற்றி விவாதிக்க ஒரு தளம். நியாண்டெர் செல்வன் மீது மிக பெரிய மரியாதை கொண்டவர்கள் நாங்கள் , தமிழக மக்களுக்கு உடலியல் மற்றும் நோயியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில்  அவர் பங்கு நிச்சயமாக போற்ற  பட வேண்டியது. ஆனால் அதற்காக  அவர் சொல்லும் அனைத்து கருத்துக்களுக்கும் "ஆமாம்" போட முடியாது. சில எதிர் விவாதங்கள் கட்டாயம் தேவை படுகின்றன.கட்டாயம் அதை அவரும் விரும்புவர் என எண்ணுகிறோம். நாங்கள்  அவருக்கு எதிரி அல்ல, அவர் சொல்லும் சில கருத்துக்களுக்கு மட்டும் தான்.. நீங்களே சொல்லுங்கள், எதிர்மறை வினாக்களோடு எதாவது ஒரு post-ஐ உங்கள் குழுவில் பார்த்து இருக்கறீர்களா?  LCHF மிகவும் நல்ல உணவு முறை, இதை நாங்கள் தவறு சொல்ல வில்லை , ஆனால்  அதற்காக பரிந்துரைக்க படும் சில உணவு பொருள்களுக்கு தான் எதிர்ப்பு.

பண்ணை கோழியை அவர் மக்களை உண்ண மிகவும் ஊக்கம் அளிக்கிறார். அது தவறு என யாரும் வாதிட கூடாது என நீங்கள் எண்ணுகிறீர்களா?
மட்டன்  கிலோ 500 ரூபாய், ஒரு வாரம் பழையது ஆனாலும் ஹோட்டல்களில் அதை வெளியே தூக்கி வீச மாட்டார்கள் ,சூடு செய்து அப்படியே தான் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பார்கள். தினமும் பேலியோ டயட் எனும் பெயரில் சிக்கன்,மட்டன் என உண்ணும் நண்பர்களின் நிலை என்ன? இது பற்றி யாரும் எதுவும் சொல்ல கூடாதா?
 50 வருடங்கள்  முன் நம் தாத்தா பாட்டி ஆரோக்கியமாக இருந்தார்களே  ஏன் அவர்களை விட்டு 1000 வருடங்கள் முன் வாழ்ந்த அமெரிக்க ஆதிவாசிகளை உதாரணமாக சொல்கிறீர்கள் என கேட்க கூடாதா ?

நன்மை தீமை இரண்டும் சம அளவில் விவாதிக்க பட வேண்டும் , அப்போது தான் உண்மையான கருத்துக்கள் கிடைக்கும்.

இது யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுத படும் வலைப்பூ அல்ல, இதனால் எங்களுக்கு மிகவும் நேர விரயம் தான் , இதில் என்ன லாப நோக்கம் இருக்க முடியும்?

இது நன்மை தீமைகளை விவரிக்கும் ஒரு தளமே. இங்குள்ள கேள்விகளுக்கு  குகுளில் தேடி பார்த்து பதிலளியுங்கள், நாங்கள் தவறென்றால் ஒப்பு கொள்கிறோம். தனிப்பட்ட விமர்சனங்களால் ஒரு பலனுமில்லை, நல்ல கருத்துடன் வாருங்கள் ஆரோக்கியமான விவாதம் செய்வோம்.

டயட் நிறுத்தம் - நமக்கு முதல் வெற்றி

டயட் நிறுத்தம் - நமக்கு முதல் வெற்றி

ஒரு முக்கிய பேலியோ குழு , இன்று முதல் தாங்கள் டயட் சொல்வதை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கட்டாயமாக இது பல மக்களின் உயிரை கான்செர் போன்ற  கொடிய  வியாதிகளிடம் இருந்து காப்பாற்றும் என்பதில் மாற்றமில்லை. இவர்கள் டயட் சொல்லுவதை நிறுத்த,மிரட்டல் விடுவதாகவும், கார்ப்பரேட்களின் சதி என்றும் பல புனை கதைகள்  கட்டுக்களாக  அவிழ்த்து விட்டுள்ளார்.

ஆனால்  உண்மை வேறு.  உண்மையில், உணவியல் பற்றிய போதிய அறிவில்லாமல், அரசாங்க அனுமதி இல்லாமல் , நோயாளிகளுக்கு டயட் வழங்குவது  சட்டப்படி தவறு.இவர்கள் வழங்கும் டயட்டில் நோயாளிகளுக்கு ஏதவாது  நேர்ந்தால், சட்டப்படி டயட் வழங்குபவர்களே அதற்கு பொறுப்பாவர்கள்  என பின் வரும் வலைப்பூவில்  இன்று விளக்கி இருந்தோம். இதை படித்த பின்னர் ஏற்பட்ட பயத்திலேயே, இந்த குழு பின் பின்வாங்கி ஏதோ  கார்பெரேட் சதி   அது இது என்று  கதை பேசுகிறது.

http://paleov2.blogspot.in/2016/10/trends.html

இவர்கள் செய்யும் செயல் நேர்மையானதாக இருந்தால் களத்தில்  இறங்கி போராடலாமே , ஏன் தப்பித்து ஓட பார்க்கின்றனர். சட்டப்படி  காவல் துறையில் முறையிடலாமே ? வழக்கு தொடுக்கலாமே?

ஏன் செய்யவில்லை ?

பேலியோ 2.0 காலை டயட் 1

இது நமது பாட்டன்,பூட்டன்களின் உணவு முறை , 1000 ஆண்டுகள் முன் அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களின் ஐஸ் மலையில் பச்சை மீன்களை தின்று உயிர் வாழ்ந்த பழங்குடி மக்களின் டயட் முறை அல்ல, நமது கண் முன்,ரத்தமும் சதையுமாக 50,60 ஆண்டுகள் முன் ஆரோக்கியமாக வாழ்ந்த நமது தாத்தா பாட்டிகளின் எளிய உணவு முறை.  இந்த டயட் பின்பற்றினால் சுகர்   சடாரென குறையாது,பிரஷர் சடாரென குறையாது,தலையில் உடனடியாக ஒரு வாரத்தில் அதிகம் முடி முளைக்காது, ஆனால் பின் விளைவுகள் ஏதும் இன்றி,ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம். ஆனால் இதை தொடர்ச்சியாக பின்பற்றினால் சர்க்கரை,பிரஷர் போன்றவை எதுவும் வராது,உடல் நன்றாய் வலுப்படும் ,தேகம் மிக பொலிவுறும்.

எந்த உணவு முறையை பின்பற்றினாலும் , உடல்பயிற்சி மிக மிக அவசியம். காலையில் உடல்பயிற்சி சிறிது நேரம் செய்வது மட்டுமின்றி , நாள் முழுதும் நமது பணியில் ,ஏதவாது ஒரு வகையில்  உடல் பயிற்சியை கொண்டிருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நீங்கள் அமிர்தமே உண்டாலும் , ஒரு மணி நேரமாவது உடல் பயிற்சி இல்லை என்றால் , அதன்  பயன் உங்களுக்கு கிடைக்காது.


காலை டயட்
----------------
1. ராகி களி இரண்டு உருண்டை, தயிர் அல்லது  ஏதெனும் ஒரு கீரை சேர்த்து.

ஒரு கிலோ ராகி 35 ரூபாய் மட்டும், ஒரு கிலோவில் நான்கு  வேலை ஒரு நபர் சாப்பிடலாம்.  இதை பின்பற்ற பொருளாதாரம் ஒரு தடையாய்  இருக்காது.
ராகி மானாவாரியாக விளைவது, ஒரு துளி அளவு கூட பூச்சி மருந்தோ,உரங்களோ இல்லை.
விலை குறைவாக இருப்பதால் , கலப்படம் ஒன்றும் செய்ய முடியாது.
இரண்டு ராகி களி  உண்டால் , 5 மணி நேரத்திற்கு சுத்தமாக பசிக்காது,எதுவும் உண்ணவும் தோணாது.
இது செய்வது முதலில் கொஞ்சம் கடினமாக இருக்கும் ஆனால் இரண்டு நாட்களில் பழகி விடும்.
கார்போஹைட்ரெட் அளவு அரிசியை விட சிறிதுதான் குறைவு, இருந்தாலும் ,புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின் போன்ற மற்ற சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது.
ராகி கூழாக குடிக்க கூடாது , ஏனென்றால் அது எளிதில் ஜீரணமாகி மீண்டும் பசியை தூண்டும். எனவே களியாகவோ , ரொட்டி போன்றோ செய்து சாப்பிடலாம்.
உடல் எடை குறையும், ஆனால் உடனடியாக அல்ல.
மித்தியானைன் (Methionine) என்ற அமிலத்தை கொண்ட தானியம் ராகி மட்டுமே, இது கல்லிரல் தொடர்பான அனைத்து நோய்க்கும் சரியான மருந்து,மேலும் கல்லிரல்  வீக்கம், fatty லிவர் போன்றவற்றை இந்த உணவு முறை எளிதில் சரி படுத்தும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நீண்ட நாள் தொடர்ச்சியாக எடுக்க கூடிய நல்ல உணவு, சர்க்கரையின் அளவை முழுமையாக கட்டுப்படுத்த முடிய விட்டாலும், ஓரளவு சிறப்பான நிலையில் சர்க்கரையின் அளவை இதனால் வைத்திருக்க முடியும்.

30000 வருடங்கள் முன்

கடைசியாக லோரன் கோர்டைன் (Loren Cordain) 2002 ம் வருடம்  தி பேலியோ டயட் (The Paleo Diet) என்ற புத்தகத்தை எழுதிய போது  பேலியோதிக் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் , தானியங்கள் உண்டார்களாக இல்லையா என்பது  ஒரு நம்பக தன்மை இன்றி ஒரு அனுமானத்திலே தானியங்கள் அவர்கள் உண்டிருக்க வாய்ப்பில்லை தன் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். விவசாயம் தோண்டியது  10000 வருடங்களுக்கு முன்பு தான் என பல்வேறு ஆய்வுகள், தெரிவித்திருந்த நிலையில், விவசாய காலத்திற்கு முன் தானியங்கள் விளைவித்து உண்ண  வாய்ப்புகள் இல்லை என்ன கருத்தை கொண்டே, தானியங்கள் பேலியோ காலத்தில் உண்ணப்படவில்லை என கூறப்பட்டு வந்தது.

ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களான ,அமிலஸ் ஜீன் (amylase gene)  எண்ணிக்கை பத்துக்கு மேல் கொண்ட நம் முன்னோர்கள் உடல் படிமங்களும், உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி கிடந்த தொல் பொருள்களான 33000 ஆண்டுகள் முதல் 100000 ஆண்டுகள் பழமையான தானியங்கள் அரைக்கும் கற்களும், மனிதன் தானியங்கள்  பேலியோ காலத்திற்கு பல ஆயிரம் வருடங்கள் முன்பே மனிதன் தானியங்கள் உண்ண  துவங்கி விட்டான் என்பதை தெளிவாக காட்டுகிறது.

எனவே பேலியோ காலத்தில் மனிதன் தானியங்கள் உணவில்லை என்பது , ஒரு நிருபனமற்ற , கற்பனையான ஒரு செய்தி. தானியங்கள் உணவில்லை என்பதை நிரூபணம் செய்வதை விட, தானியம் உண்டான் என நிரூபணம் செய்ய பல புதிய ஆராய்ச்சி தகவல்கள் உள்ளன.


இதை பற்றி ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.நேரமிருந்தால் இதை படித்து மேல்சொன்ன  கருத்துக்களை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

http://sydney.edu.au/news-opinion/news/2015/08/10/starchy-carbs--not-a-paleo-diet--advanced-the-human-race.html
http://www.nytimes.com/2015/08/13/science/for-evolving-brains-a-paleo-diet-full-of-carbs.html?_r=0
http://www.telegraph.co.uk/foodanddrink/foodanddrinknews/11798169/Did-cavemen-eat-carbs-Why-the-paleo-diet-could-be-wrong.html

இதிலிருந்து தெரியவருவது பேலியோ மனிதரும் அதற்கு முந்தையவருக்கும் மாவு சத்துள்ள உணவுகள் புதிதல்ல.

33000 வருடங்கள் முன்பு உபயோகித்த தானியம் அரைக்கும் கற்கள் பற்றிய விளக்கங்கள்
http://www.nature.com/news/2010/101018/full/news.2010.549.html
http://www.npr.org/sections/thesalt/2015/09/14/440292003/paleo-people-were-making-flour-32-000-years-ago
http://theplate.nationalgeographic.com/2015/09/11/ancient-oat-discovery-may-poke-more-holes-in-paleo-diet/

பண்ணை கோழியும் பரலோக பயணமும் 2

ரோக்ஸர்சோன் (Roxarsone) , இது பண்ணை கோழிகளின் தீவனத்தில் கோழிகளின் அதீத வளர்ச்சிக்கும் , கொழுத்த எடை பெறவும், நோய் எதிர்ப்பு சக்திற்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும் ஒரு ஊக்க மருந்து , இந்த ஊக்க மருந்து செய்ய பயன்படும் முக்கிய மூலப்பொருளாக உபயோக படுத்தப்படுவது இரசாயன நச்சுப் பொருள் ஆர்சனிக்(Arsenic). இந்த ஆர்சனிக், ரோக்ஸர்சோன் ஊக்க மருந்துகளில் மட்டுமின்றி அனைத்து வகையான ஆன்டி பயாடிக் மருந்துகளிலும் பெரும்பான்மையாக காணப்படுகிறது.. இந்த ஆர்சனிக் மாசுபாடுள்ள தண்ணீர் , அதில் விளையும் தானியங்கள் போன்றவற்றிலும் காணப்படுகிறது ஆனால் இது அதிக தீங்கற்ற ஆர்கானிக் வகையை சார்ந்ததாகும் . ஆனால் ரோக்ஸர்சோன்-ல் உள்ள ஆர்சனிக் மிகவும் கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் இன்-ஆர்கானிக் வகையை சார்ந்ததகும். இது 2014ம் வருடம் இதன் விளைவுகளை உணர்ந்த அமெரிக்க உணவு & மருந்து கட்டுப்பாட்டு தலைமை (FDA), அமெரிக்கர்கள் உண்ணும் 70% சிக்கன் உணவுகளில் கேன்சரை உண்டாக்கும் ஆர்சனிக் உள்ளது என பகிங்கரமாக அறிவித்து ,இந்த வகை மருந்துகளை அதிரடியாக தடை செய்தது.


http://www.fda.gov/AnimalVeterinary/SafetyHealth/ProductSafetyInformation/ucm257540.htm http://www.msn.com/en-ca/foodanddrink/foodnews/finally-the-fda-admits-that-nearly-over-70percent-of-us-chickens-contain-cancer-causing-arsenic/ar-AA8cWca ஆனால் இந்தியாவில் இதுவரை ரோக்ஸர்சோன் கோழி பண்ணைகளில் இந்த வகை மருந்துகள் உபயோகிப்பது இன்னும் தடை செய்யப்படவில்லை. பெரிய பண்ணை கோழி அதிபர்களிடம் , கோழி வளர்க்கும் ஒப்பந்தம் போட்டுள்ள விவசாயிகளை இந்த கம்பெனிகள் அவர்களிடமுள்ள தண்ணீரின் உப்பின் தன்மை,காற்றோட்டமுள்ள பண்ணை அமைப்பு, அவர்கள் கோழிகளை வளர்க்கும் முறை போன்றவற்றை கருத்தில் கொண்டு கோல்ட்,டயமண்ட்,சில்வர் என விவசாயிகளை தரம் பிரித்து வைத்துள்ளனர் . இதில் டைமோண்ட் வகை விவசாயிகள் வளர்க்கும் கோழிகள் மட்டுமே வெளி நாட்டு ஏற்றுமதிக்கு அனுப்பப்படும், டைமோண்ட் வகை கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனம் மற்ற கோழிகளிடமிருந்து மிகவும் வேறுபட்டது. எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதோ, அந்த நாட்டின் தர கட்டுப்பாட்டின் விதி முறைக்கு ஏற்ப , இவற்றின் தீவன மூல பொருட்கள் மாற்றி அமைக்கபட்டிருக்கும். மிகவும் புத்திசாலிதனமாக கோழியின் கல்லிரல்,கிட்னியில் தான் இந்த மருந்துகள் தங்கி இருக்கும், அதனால் கோழியின் இறைச்சியில் ஒன்றும் இருக்காது என தனக்கு தானே ஆறுதல் கூறி கொணடு இறைச்சி மட்டும் தின்னலாம் என்று நினைக்க வேண்டாம்.இந்த ஆர்சனிக் நச்சு தன்மை ஒரு கிலோ கோழி இறைச்சியில் 6 மைக்ரோ கிராம் அளவு சாதாரணமாக காணப்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. அமெரிக்கா புற்றுநோயாளிகளின் இடத்தில முன்னிலையில் இருப்பதட்கு இந்த ஆர்சனிக் எனும் நச்சு பொருளே மிக முக்கிய காரணமாக இருக்கும் எனவும் இது 20 வருடங்கள் முன்பே தடை செய்ய பட்டிருக்க வேண்டும் என்றும் உணவு துறை வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.