Thursday, October 20, 2016

பேலியோவும் மார்பக புற்றுநோயும் ?

சுமார் பத்து வருடங்களுக்கு முன் கோவா அரசு மருத்துவ கல்லூரியின் புற்றுநோய் பிரிவு நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ,பிராய்லர் கோழி உண்பது இந்த வகை கேன்சருக்கு முக்கிய காரணமாக கண்டுபிடிக்கப்பட்டது. கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஸ்டெராய்டு (steroid) மருந்துகளால் தான் இந்த பாதிப்பு உணடாகிறது எனவும் கூறப்பட்டது . இந்த கோழிகளை நீண்ட நாள் தொடர்ச்சியாக உண்பவர்களுக்கு , இந்த வகை கான்செர் வர வாய்ப்புகள் மிக மிக அதிக என இந்த ஆராய்ச்சியின் தலைவரான டாக்டர்.பின்டோ குறிப்பிடுகிறார்.. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற பிராய்லர் சிக்கன் தீமைகள் குறித்த பல ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடபட்டன , ஆனால் பலகோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட இத்தொழிலை நிறுத்த முடியுமா?சிக்கன் உற்பத்தி நிறுவனங்கள் மீடியாக்களின் துணையுடன் இதை இருட்டடிப்பு செய்து விட்டன.. இது பற்றி பத்து வருடங்கள் முன்பு ஆனந்த விகடன்,குமுதம் போன்ற தமிழ் நாளிதள்கலிலும் பரபர பரப்பாக பல கட்டுரைகள் வந்தன.பின் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது.நீங்கள் கூகிளில் (breast cancer + broiler chicken ) என டைப் செய்தால் எண்ணற்ற கட்டுரைகளை இது பற்றி இயலும்.
ஆனால் பேலியோ டயட் என்ற பெயரில், இந்த சிக்கன் உணவு தினசரி உணவாக (வேண்டிய அளவு ,தோலுடன் ) ஒரு குழுவில் பரிந்துரைக்கப்படுகிறது ..பாருங்கள் நாட்டுக்கோழி கிடைத்தால் நல்லதாம் ,இல்லை என்றால் பிராய்லர் கோழியே பரவாயில்லையாம்...மக்களுக்கு கிடைக்கும் தற்காலிக உடல் உபாதைகள் நிவாரணத்தை ,இவர்களின் பெரும் வெற்றியாக கொண்டாடி , மக்களின் உயிருடன் விளையாடி வருகின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் இவர்கள் வர்த்தக திட்டத்தை மக்கள் இப்போதே மெதுவாக உணர தொடங்கி விட்டனர்...
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது .
எனும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, யார் என்ன சொன்னாலும் குருட்டுதனமாக பின்பற்றாமல் ,கொஞ்சமாவது ஆராய்ந்து செயல்படுங்கள்...

http://www.topnews.in/broiler-chicken-can-cause-breast-cancer-study-report-22332

1 comment:

  1. நீதான் தம்பி குருடன் ஏன்னா ப்ராலர் கோழி 99.9% நீங்கள்தான் சாப்பிட்டு .1% சாப்பிடும் எங்களை தூதுர மக்கு
    அன்புடன்
    பாலு

    ReplyDelete