Thursday, October 20, 2016

பேலியோ பின்பற்றும் மக்களுக்கு ஒரு கேள்வி?

பேலியோ டயட் மோகத்தில் நீங்கள் சிந்திக்க மறந்த ஒரு சிறு விஷயம்..ஏன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் கண்டுபிடிக்கபடாததற்கு முன்தான் மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்களா? அதுக்கு பிறகு யாருமே ஆரோக்கியமாக இல்லையா? நம் தாத்தாவின் தலைமுறையில் 80 ,90 வயதுவரை சாதாரணமாக ஆரோக்கியமாக வாழ்ந்தார்களே அவர்கள் எல்லாம் பேலியோ டயட் பின்பற்றியவர்களா? ...சர்க்கரை ,பிரஷர் ,கான்சர் எல்லாம் கடந்த 50 வருடங்களில் உண்டான நோய்கள் ( ஒரு சில மன்னர்களுக்கு ,பெரும் பணக்காரர்களுக்கு 100 வருடங்களுக்கு முன்னரே இவை வந்திருக்கலாம், அவை விதிவிலக்கு), இதை சரி செய்ய கடந்த 50 வருடங்களில் என்ன தவறு நடந்திருக்கிறது என்பதை ஆராய்ந்தால் போதும்,மிக எளிதாக கண்டறிந்து விடலாம்...
உங்கள் பாட்டியோ,தாத்தாவோ, அல்லது யாரேனும் 80 வயதை கடந்த பெரியவர்களை கண்டால்.அவர்களிடம் கேளுங்கள் அவர்களின் உணவு முறை எப்படி அவர்கள் காலத்தில் எப்படி இருந்தது,மாதத்தில் எத்தனை முறை அசைவஉணவுகள் எடுத்துக்கொண்டார்கள் ,அவர்கள் எடுத்த காய்கறிகள் ,பழங்கள் என்னென்ன? முடிந்தால் google -லில் South Indian food style at 1900s என்று தேடி பார்க்கவும்.. கிடைக்கும் மொத்த தகவலில் நாம் அறியும் என்றே ஒன்று, பெரும்பாலும் அவர்களின் முக்கிய உணவு சைவம் தான், வாரம் ஒரு முறை மட்டும் அசைவ உணவு. அதுவும் வருடங்களில் சில மாதங்கள் சுத்தமாக அசைவ உணவு இல்லை...
மேலும் அவர்களின் பெரும்பான்மையான உணவு களி,பால்,மோர் ,தயிர்,சோளம்,அரிசி சோறு போன்றவைகள் தான்...அதிக மாவு சத்து கொண்ட இந்த தானியங்கள் தான். பின் எப்படி அவர்கள் எப்படி நோயின்றி வாழ்ந்தார்கள்?

1.நல்ல  உடல் உழைப்பு
2.நல்ல உறக்கம் ( இரவு 8 மணி முதல்,காலை 5 மணி வரை )
3.கலப்படமற்ற உணவு பொருள்கள்  ,சிறு தானிய உணவுகள்
4.மன அழுத்தம் போன்ற  மன ரீதியான நோய்கள் இல்லாமை.

இதில் தான் நமக்கும், நமக்கு 50 வருடங்கள் முன் ஆரோக்கியமாக வாழ்ந்த மனிதர்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்.ஆக தற்போதைய நோய்களை களைய ,மேற்கணட நான்கை  தான் நம் நடைமுறை வாழ்வில் நமக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்தாலே மிக எளிதாக நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.இந்த முறை மிகவும் எளிமையானது ,இயல்பாக பசிக்கும்போது உணவு உணவுதல், தண்ணீர் சரியான அளவு குடிப்பது,தேவையற்ற குப்பை உணவுகளை தவிர்த்தல் , மன உளைச்சலை முழுதும் தவிர்த்தல் ,உடற்பயிற்சி,யோகா,மூச்சு பயிற்சி போன்ற சில வற்றை பின்பற்றல்,அவ்வளவே.

ஆனால் இந்த மக்கள்  இந்த முறையான எளிமையான செயல்கள் எதுவும் செய்ய தயாராக இல்லை.அவ்வளவு சோம்பேறிதனம் .இவர்களுக்கு வேண்டியது , ஒரே மாத்திரையில் அனைத்தும் சரியாவது போன்ற சதுரங்க வேட்டை தீர்வுகளே..3 வாரங்களில் 30 கிலோ குறைவது போன்ற மாயாஜால தீர்வுகள் தான்..காலையில் 30 நிமிடம் யோகா செய்ய சொன்னால் சோம்பல் படுகிறவர்கள் , ஏமாற்றுக்காரர்கள் எளிதில் கிடைக்காத எதையாவது உண்ண  சொல்லிவிட்டால், நாள் கணக்கில் நாயாய் அலைவார்கள் .. உதாரணமாக கெபிர் என்று ஒரு பொருள், இதில் நன்மை செய்யும் பாக்டிரியாவின்(probiotics) அளவு அதிகமாக இருகிறது,நமது ஊரின்  தயிர் போன்றது . குளிர் நாடுகளில் நோய் பரவும் வாய்ப்புகள்(குளிர்ந்த சூழ்நிலையில்,நுண்ணுயிரிகள் எளிதில் அழியாது) மிக அதிகம் ,எனவே குளிர் நாடுகளில் வசிப்பவர்கள்  அதிக probiotics உள்ள உணவு பொருள்களை  நோய் தொற்றை  தடுக்க அதிகமாக  எடுத்துக்கொள்வார்கள்.இது அங்கு வழக்கம்..,

இங்கு இந்தியாவில் தயிர், புளித்த மோர் போன்றவற்றில் நமக்கு தேவையான அளவு probiotics உள்ளது...ஆனால் இவர்களுக்கு கெபிரில் உள்ள probiotics மட்டுமே வேண்டும் என ஆடம் பிடிக்கிறார்கள், தயிர் ,மோர் வேண்டாமாம் .இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இருப்பவர்களுக்கு கெபிரில்  இருக்கும் probiotics தேவையே இல்லை...நடு ஜாமத்தில் சுடுகாடு போகிறவன் தான் பேய்பிடிக்காமல் இருக்க கயிறு வாங்கி கட்டவேண்டும் ,ஆனால்  இங்கு  அனைவருமே கட்டி கொண்டு அலைகிறார்கள்..இதே கதை தான் ஓட்ஸ்க்கும்.  அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு கெபிர் தேவை, ஆனால் மண்டையை பிளக்கும் வெயில் அடிக்கும் நாட்டில்( நுண்ணுயிரிகள் மட்டுமல்ல ,மனிதர்களே அடிக்கும் வெயிலில் 1000 பேர்ல் 2000 பிற என மடிகிறார்கள்) இருந்து கொண்டு , இதை  தேடி அலைவது , மிகவும் அறிவற்ற செயலாகும்...

வேண்டிய அளவு முட்டை ,(தரமற்ற)அசைவ உணவுகள் (மிக அதிக விலங்கு புரதம்), வேண்டியஅளவு கொட்டை வகைகள்(மிக அதிக புரத சத்து) ,மீன் ,நெய்..இவை தான் நோய்  தீர்க்கும் மருந்தா? இதை தொடர்ச்சியாக எடுத்தால்  நல்லதா ? இதற்கு பின் விளைவுகள் ஒன்றுமே இல்லை என்று நினைக்கிறீர்களா?

சரி பின் நல்ல டயட் என்ன?

வாரம் ஒருமுறை அசைவம் உண்ணுங்கள்.
வாரம் 3 முட்டை எடுத்து கொள்ளுங்கள்.
கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் ,நல்லெண்ணெய் என வராமொருமுறை மாற்றி மாற்றி சமையுங்கள்.
தினம் ஒரு சிறு தனியா உணவு எடுத்து கொள்ளுங்கள்.(தினை,சோளம்,குதிரை வாலி,ராகி,கோதுமை)..சிறு தானியங்கள் மானாவாரியாக விளைவிக்க படுபவை,எனவே இதில் பூச்சி உரங்கள் என்ற ஒன்றும் இருக்காது. நிலக்கடலையும்  அவ்வாறே.
அரிசி உணவு வாரம் ஒருமுறை .
பசிக்கும்போது உணவு உண்ணுங்கள் ,தண்ணீர் மிக அதிகம் குடியுங்கள்.
உடலில் வெயில்படும்படி கொஞ்ச நேரமேனும் நில்லுங்கள்.
இரவு 8 மணி நேரம் உறங்குங்கள்.
மாடி தோட்டத்தில் காய்கறி வளர்த்து , மருந்தில்லா காய்கறி  உண்ணுங்கள் ..
முக்கியமாக உடல்பயிற்சி ,யோகா போன்றவை தவறாமல் காலை நேரம் 30 நிமிடம் செய்யுங்கள்.
6 மாதம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்யுங்கள் , அந்த மருத்துவ அறிக்கையை நீங்களே ஆராயும் அளவு  உங்கள் மருத்துவ அளவை கொஞ்சமாவது வளர்த்து கொள்ளுங்கள்..
எல்லா மதத்திலும் விரதம் என்ற முறை இருக்கிறது , அதை அவரவர் மதம் போல் பின்பற்றுங்கள்...

80 வயதுக்கு மேல் வாழ்ந்த பெரியவர் யாவரையும் கண்டால் அவரிடம்போய் டயட் கேளுங்கள்..அவர்கள் சொல்வது தான் உண்மையானது .

இவை அதிக செலவில்லாத  100 வருடங்களுக்கு முன் ஆரோக்கியமாக வாழ்ந்த நம் பாட்டன்களின் உணவு முறை...சிறிது முயற்சித்தால் எளிதாக இதை பின்பற்றலாம்.அதை விடுத்து நான் 10000 வருடங்கள் முன்னர் வாழ்ந்த குகை மனிதன் போல் உணவு உண்டு இந்த நோய்களை விரட்ட போகிறேன் , 100000 ஆண்டுகள் முன் வாழ்ந்த குரங்கு மனிதன் போல் மரத்தில் ஏறி வாழ போகிறேன் என்று கூறி திரிந்தால் , உங்களுக்காக அனுதாப படுவதைதவிர்த்து வேறுவழி இல்லை.. நம் கண் முன் வாழும் நம் தாத்தா பாட்டிகளின் வாழ்கையிலிருந்து பாடங்களை படிக்காமல், ஏதோ அமெரிக்க ஐரோப்பிய தீவுகளில் வாழும் ஆதி வாசி மக்களைபற்றிய கட்டுரை பற்றிய பாடங்களா தேவை நமக்கு??... உண்மை உணர்வோம். கவர்ச்சி விளம்பரங்களுக்கு பலியாகாமல் , ஆரோக்கியமாக வாழ்வோம்.

1 comment:

  1. உங்களுடைய வாதங்கள் மேம்போக்காக உள்ளன நீங்கள் பேலியோவை புரிந்து கொள்ளவில்லை அல்லது பேலியோ உணவு முறை பரவினால் தமது வியாபாரம் பாதிக்கும் என்ற காழ்புணர்சியால் புழுதிவாறியிரைக்கிரீர் என்பது தெளிவாக தெரிகின்றது
    அன்புடன்
    பாலு

    ReplyDelete