Monday, October 31, 2016

பண்ணை கோழியும் பரலோக பயணமும் 2

ரோக்ஸர்சோன் (Roxarsone) , இது பண்ணை கோழிகளின் தீவனத்தில் கோழிகளின் அதீத வளர்ச்சிக்கும் , கொழுத்த எடை பெறவும், நோய் எதிர்ப்பு சக்திற்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும் ஒரு ஊக்க மருந்து , இந்த ஊக்க மருந்து செய்ய பயன்படும் முக்கிய மூலப்பொருளாக உபயோக படுத்தப்படுவது இரசாயன நச்சுப் பொருள் ஆர்சனிக்(Arsenic). இந்த ஆர்சனிக், ரோக்ஸர்சோன் ஊக்க மருந்துகளில் மட்டுமின்றி அனைத்து வகையான ஆன்டி பயாடிக் மருந்துகளிலும் பெரும்பான்மையாக காணப்படுகிறது.. இந்த ஆர்சனிக் மாசுபாடுள்ள தண்ணீர் , அதில் விளையும் தானியங்கள் போன்றவற்றிலும் காணப்படுகிறது ஆனால் இது அதிக தீங்கற்ற ஆர்கானிக் வகையை சார்ந்ததாகும் . ஆனால் ரோக்ஸர்சோன்-ல் உள்ள ஆர்சனிக் மிகவும் கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் இன்-ஆர்கானிக் வகையை சார்ந்ததகும். இது 2014ம் வருடம் இதன் விளைவுகளை உணர்ந்த அமெரிக்க உணவு & மருந்து கட்டுப்பாட்டு தலைமை (FDA), அமெரிக்கர்கள் உண்ணும் 70% சிக்கன் உணவுகளில் கேன்சரை உண்டாக்கும் ஆர்சனிக் உள்ளது என பகிங்கரமாக அறிவித்து ,இந்த வகை மருந்துகளை அதிரடியாக தடை செய்தது.


http://www.fda.gov/AnimalVeterinary/SafetyHealth/ProductSafetyInformation/ucm257540.htm http://www.msn.com/en-ca/foodanddrink/foodnews/finally-the-fda-admits-that-nearly-over-70percent-of-us-chickens-contain-cancer-causing-arsenic/ar-AA8cWca



 ஆனால் இந்தியாவில் இதுவரை ரோக்ஸர்சோன் கோழி பண்ணைகளில் இந்த வகை மருந்துகள் உபயோகிப்பது இன்னும் தடை செய்யப்படவில்லை. பெரிய பண்ணை கோழி அதிபர்களிடம் , கோழி வளர்க்கும் ஒப்பந்தம் போட்டுள்ள விவசாயிகளை இந்த கம்பெனிகள் அவர்களிடமுள்ள தண்ணீரின் உப்பின் தன்மை,காற்றோட்டமுள்ள பண்ணை அமைப்பு, அவர்கள் கோழிகளை வளர்க்கும் முறை போன்றவற்றை கருத்தில் கொண்டு கோல்ட்,டயமண்ட்,சில்வர் என விவசாயிகளை தரம் பிரித்து வைத்துள்ளனர் . இதில் டைமோண்ட் வகை விவசாயிகள் வளர்க்கும் கோழிகள் மட்டுமே வெளி நாட்டு ஏற்றுமதிக்கு அனுப்பப்படும், டைமோண்ட் வகை கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனம் மற்ற கோழிகளிடமிருந்து மிகவும் வேறுபட்டது. எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதோ, அந்த நாட்டின் தர கட்டுப்பாட்டின் விதி முறைக்கு ஏற்ப , இவற்றின் தீவன மூல பொருட்கள் மாற்றி அமைக்கபட்டிருக்கும். மிகவும் புத்திசாலிதனமாக கோழியின் கல்லிரல்,கிட்னியில் தான் இந்த மருந்துகள் தங்கி இருக்கும், அதனால் கோழியின் இறைச்சியில் ஒன்றும் இருக்காது என தனக்கு தானே ஆறுதல் கூறி கொணடு இறைச்சி மட்டும் தின்னலாம் என்று நினைக்க வேண்டாம்.இந்த ஆர்சனிக் நச்சு தன்மை ஒரு கிலோ கோழி இறைச்சியில் 6 மைக்ரோ கிராம் அளவு சாதாரணமாக காணப்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. அமெரிக்கா புற்றுநோயாளிகளின் இடத்தில முன்னிலையில் இருப்பதட்கு இந்த ஆர்சனிக் எனும் நச்சு பொருளே மிக முக்கிய காரணமாக இருக்கும் எனவும் இது 20 வருடங்கள் முன்பே தடை செய்ய பட்டிருக்க வேண்டும் என்றும் உணவு துறை வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. இந்த blog இல் எழுதும் இந்த முகமறியா நபர் பேலியோ உணவு முறையைப் பற்றி முழுதாக தெரிந்தவர் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.....

    மருத்துவராகிய நான் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான LCHF, keto போன்ற உணவு முறைகளை ஆராய்ந்தவன். செல்வன் பரிந்துரைக்கும் உணவு முறையில் குறைந்த பட்சம் 50 கிராம் மாவுச் சத்து(carbohydrate) எடுக்கச் சொல்லுகிறார்கள்.... தினமும் காய்கறிகள் , கீரை எடுக்கச் சொல்கிறார்கள்.....தேவையெனில் பழங்களும் உண்ணச் சொல்கிறார்கள். இது modified paleo உணவு முறை ஆகும். இந்த blog எழுதும் நபர் அடிப்படை body metabolism பற்றி எதுவும் தெரியாதவர்....அதற்க்காக நேரம் செலவழித்து எதையும் படிக்காதவர்...இந்த குப்பை blog ஐ படித்து யாரும் நம்பி ஏமாற வேண்டாம். இந்த நபர் எந்த சமூக அக்கறையும், பொறுப்பும் இல்லாதவர்.....இதைப் புரிந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  2. கோழி இல்லையென்றால் ஆடு மாடு பன்றி என்று எவ்வளவோ வழியிருகே உன்னை அவங்க முகநூலேந்து தூக்கியது தப்புதான் அதுக்காக இப்படியா நல்ல டயட்டை இப்படி நொட்டை சொல்றது
    அன்புடன்
    பாலு

    ReplyDelete